ஊழல்களை
அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டம், கடந்த
ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல்
வழங்கியுள்ளார். இந்த சட்டத்தின்படி மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல்
புகார்கள் பற்றி பிரதமரிடம் மனு அளிக்கலாம். அந்த மனுவை பிரதமர்
விசாரிப்பார்.
அதேபோல்
மாநில அமைச்சர்கள் மீதான புகார்களை, மாநில முதல் அமைச்சரிடம் கொடுக்கலாம்.
ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் சட்ட அங்கீகாரம் பெற்றவரான முதல்
அமைச்சரே அந்த புகார் பற்றி விசாரிப்பார். ஆனால் தமிழகத்தைப்
பொறுத்தவரையில் முதல் அமைச்சராக இருக்கும் ஜெயலலிதா ஏற்கனவே சொத்துகுவிப்பு
வழக்கில் குற்றவாளியாக விசாரணையை சந்தித்து வருகிறார். மற்ற அமைச்சர்கள்
மீது ஊழல் புகார்கள் எழுந்தால், அவர் எப்படி விசாரிக்க முடியும் என்று
கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் ராஜாராமன், கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர்
டிராபிக் ராமசாமி ஆகியோர் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஊழல் தடுப்பு
கண்காணிப்பு ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.
முதல்
அமைச்சரே குற்றச்சாட்டியில் ஆளாகி இருப்பதால், தமிழக அமைச்சர்கள் மீது
ஊழல் புகார் வரும்போது யாரிடம் முறையிடுவது என்று அந்த மனுவில் கேள்வி
எழுப்பியுள்ளனர். எனவே இதற்கு விளக்கம் தரும் வகையில் இந்த சட்டத்தில்
திருத்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக