
அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை ஜோடி திருமணம் செய்துகொள்ள சில மாநிலங்கள் அனுமதித்துள்ளன. இருந்தும் அவர்களுக்கான சட்டப்பூர்வ நன்மைகள் கிடைக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இதற்கு எதிராக கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் நன்மைகள் பெற அனுமதி மறுக்கப்படும் சட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக இது வேற்றுமை பாராட்டுவதாகவும் உள்ளது என்றும் கூறியது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்கர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுகிறபோது, அவர்கள் யாராக இருக்கிறார்கள்? யாரை நேசிக்கிறார்கள்? என்பது ஒரு பொறுட்டல்ல. நாம் எல்லோரும் இங்கு சுதந்திரமாக இருக்கிறோம் என்று கூறினார். நாடு முழுவதும் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் இந்த தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக