சனி, 29 ஜூன், 2013

Manipal Kasturba Medical College Gang rape குற்றவாளிகள் கைது ! ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க மாணவி தயக்கம் !

UDUPI: Exactly a week after the heinous sexual assault on a medical student of Manipal's Kasturba Medical
College, police on Thursday arrested two people — Yogesh Poojari, 30, a resident of Ontibettu, and Hariprasad Poojari, 27, a resident of Badagabettu, Parkala.
Yogesh was critical in KMC Hospital, Manipal after consuming poison. Late evening, the third accused, Anand, 28, from Badagabettu, who had been absconding since morning, was admitted to KMC Hospital in a serious condition after he attempted suicide by hanging உடுப்பி: பலாத்காரத்துக்கு ஆளான மணிபால் பல்கலைக்கழக மருத்துவ மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால் சட்ட சிக்கல் ஏற்பட்டிருப்பதாக உடுப்பி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மணிபால் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பு 4ம் ஆண்டு படித்து வந்த கேரள மாணவி ஒருவர், கடந்த 20ம் தேதி மூன்று பேரால் ஆட்டோவில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். தற்போது மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர் கொடுத்த அடையாளங்கள் அடிப்படையில் 3 பேரின் உருவப்படம் வரைந்து பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஹரிபிரசாத், யோகேஷ் மற்றும் ஆனந்த் ஆகிய 3 குற்றவாளிகளை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் யோகேஷ் விஷம் குடித்தும் ஆனந்த் தூக்கு போட்டும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனந்த் உடல்நிலை தேறி வருவதாகவும், யோகேஷ் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஹரிபிரசாத்தை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையில் விசாரணைக்கு ஒத்துழைக்க மருத்துவ மாணவியும் அவரது பெற்றோரும் மறுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். ‘மாணவியோ அவரது பெற்றோரோ இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை. புகார் மனு எழுதிக் கொடுக்குமாறு போலீசில் தரப்பில் முன்வைத்த கோரிக்கையை அவர்கள் மறுத்துவிட்டனர். குற்றவாளிகளை அடையாளம் காட்டவும், கோர்ட்டில் சாட்சி சொல்லவும் மாணவி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை மேற்கொண்டு எவ்வாறு எடுத்து செல்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என கூறும் போலீசார், இது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: