வியாழன், 27 ஜூன், 2013

பாரதிராஜா விஜயகாந்த் மீது பாய்ச்சல்: பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!'

சென்னை: தொடர்ந்து பரபரப்பு கிளப்பி வருகிறார் இயக்குநர் பாரதிராஜா. இளையராஜா, சமீபத்தில் மறைந்த மணிவண்ணன் ஆகியோருக்கு அடுத்து, இப்போது அவரது அட்டாக் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது. தமிழரல்லாத விஜயகாந்த், தமிழரை ஆளக் கூடாது என்னும் பொருள்பட, மிஸ்டர் விஜயகாந்த், பாவம் தமிழர்கள், எங்களை விட்டுவிடுங்கள் என்று காட்டமாகக் கூறியுள்ளார். இந்த வாரம் விகடன் மேடையில் வாசகர் கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பதில்: கேள்வி: விஜயகாந்த்-எங்கே... உங்க மனசுல என்ன தோணுதோ... பளிச்னு சொல்லுங்க? பதில்: இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனா, தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க? கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. ஆனா, தமிழ்நாட்டுல? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே... கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க. தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!'' tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: