திங்கள், 24 ஜூன், 2013

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் வியாபாரத்தை பெருக்கும் மோடி மஸ்தான்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி புதிகாக அமைத்துள்ள தகவல் தொடர்பு குழுவின் தலைவரான அஜய் மக்கான் இது தொடர்பாக மேலும் கூறியது: அரசியல்வாதியாக நரேந்திர மோடி தனது தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார் என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்<இயற்கை சீற்றத்தால் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, சேதங்களால் நாடே கவலை கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் தங்களை மீட்புப் பணிகளில் முழுமையாக அர்ப்பணித்துள்ளனர். ஆனால் அவர்களின் ஊக்கத்தை குறைக்கும் வகையில் மோடி செயல்பட்டு வருகிறார். உத்தரகண்ட் மாநிலத்துக்கு அவர் சென்று ஒரு நாளில் 15 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றியதாக ஒரு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது வியப்பை அளிக்கிறது. பேரழிவு சம்பவத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்களும் உத்தரகண்ட்டுக்கு சென்று வந்தனர். ஆனால் அவர்கள் யாரும் மோடியைப் போல தங்கள் வருகையை தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நேரத்தில், அரசியல் கட்சிகள் ஒன்றிணைத்து அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது என்றார் அஜய் மக்கான்.

கருத்துகள் இல்லை: