
குறிவைத்து தாக்கும் பேர்வழிகளின்
தொகையை பார்த்தால் மிகவும் தெளிவாக தெரிகிறது திமுக வின் அடுத்த வாரிசு கனிமொழிதான் ,
எப்போதும் எதிரிகள் சரியாக கண்டு பிடிப்பார்கள். இந்த புலம் பெயர் புலிகளின் தமிழக அடிவருடிகள் ஒரு போதும் ஸ்டாலினையோ அழகிரியையோ தாக்குவதில்லை . கலைஞரை எப்போதும் வாய்க்கு வந்தபடி சேறு பூசுவார்கள் இவர்களின் சேறு கலைஞரை ஒன்றும் செய்யாது , மாடுகள் முட்டி மலைகள் சரிவதில்லை ,

ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அகதிகளுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டது , இலங்கை அகதிகளை ஒரு கிரிமினல்களாக நடாத்தியதை மறுக்க முடியுமா ?
ஜெயலலிதா இவர்களுக்கு எவ்வளவு தீமை செய்தாலும் அவர் மீது உள்ள பயம் காரணமாக அவரை பற்றி அளந்து அளந்துதான் விமர்சிப்பார்கள்.
கலைஞர் எப்போதும் இவர்களுக்கு நன்மைகளையே செய்கிறார் ,
ஆனால் நன்மை செய்பவற்கே தீமை செய்தல் என்ற சுயகுணம் இருக்கிறதே ?
இது உளவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விடயம் .
கலைஞர் ஜெயலலிதாவை போல் இவர்களை வேட்டையாடாமல் மனிதர்களாக மதித்தார் ,
ஜெயிலில் போட்ட ஜெயலலிதாவுக்கு வைகோ சூட்டிய புகழ்மாலைகள் எத்தனை ?
(கைகொடுத்த கலைஞருக்கு அவர் காட்டிய நன்றியைத்தான் வரலாறு காட்டி கொண்டிருக்கிறதே ? நாஞ்சில் வழியில் விரைவில் பஜனை கோஷ்டியில் சேர்ந்து விடுவார் . பாவம் நாஞ்சில்)
அதனால் அவர்மீது இவர்களுக்கு இளக்காரம் , கனிமொழியும் போரின் இறுதி நாட்களில் சத்தம் போடாமல் சிதம்பரம் மூலம் ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு முயற்சி செய்தார் ,
அதையும் வைகோ குழப்பி அடித்து எல்லோரையும் நந்தி கடலில் தள்ளினாரே?
அந்த துரோகம் இன்று வெளிப்பட்டு விட்டதே என்ற பதட்டத்தில் உதவி செய்த கனிமொழியையும்வழக்கம் போல சேறு பூசும் வேலையை செய்கிறார்கள் ,
இவர்களுக்கு குமுதம் விகடன் போன்ற ஊடக வியாபாரிகள் தோல் கொடுப்பார்கள் .
பணப்பட்டுவாடா தொடரும் வரை இந்த மாதிரி சேறு அடிப்பு பிரசாரங்கள் தொடரும் ,
யார் என்ன சொன்னாலும் தமிழகத்தின் நலனில் ஆகட்டும் சமுக நீதி மற்றும் சுய மரியாதை கொள்கைகளை இன்று வரை ஓரளவுக்கு தானும் கடைபிடிக்கும் ஒரு பெரிய அரசியல் இயக்கம் தென் இந்தியாவில் உண்டென்றால் அது திமுகதான் ,
வரலாறு முழுவதும் எததனையோ எதிர்ப்புக்களை அவமானங்களை தோல்விகளை சந்தித்து இருந்தாலும் தமிழத்தின் கடந்த கால முன்னேற்ற படிகளில் அதிகமாக எழுதப்பட்டிருக்கும் பெயர் கலைஞர் ,மு ,கருணாநிதி என்பதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக