வியாழன், 27 ஜூன், 2013

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்..அதிமுகவினருடன் இணைந்து வாக்களிப்பு!

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்களா? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? என்ற சஸ்பென்ஸ்க்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அதிமுகவினருடன் இணைந்து இன்று வாக்களித்தனர். தமிழக ராஜ்யசபா தேர்தலில் 6 எம்.பி. இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். இதில் தேமுதிக சார்பில் இளங்கோவன் போட்டியிடுகின்றார். அவரை ஆதரிக்குமாறு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பியிருந்தார். இருப்பினும் தாங்கள் அதிமுகவை ஆதரிப்போம் என்று 7 பேரும் அறிவித்திருந்தனர். சஸ்பென்ஸ் உடைத்த தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்..அதிமுகவினருடன் இணைந்து வாக்களிப்பு! இந்நிலையில் நேற்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரும் தலைமைச் செயலகம் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வாக்களிப்பது எப்படி என்று அதிகாரிகள் விளக்கினர். அப்போது, தாங்கள் தேமுதிகவையோ திமுகவையோ ஆதரிக்கமாட்டோம் என்று கூறியிருந்தனர். பின்னர் நேற்று இரவு அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் தேமுதிக தரப்பில் போன் மூலம் ஆதரவு கோரப்பட்டது. ஆனால் எவருமே பதிலளிக்காமல் இருந்துவிட்டனர். இதனிடையே காலை 9 மணிக்கு அதிமுக தலைமையில் இருந்து உத்தரவு வரும்.. அதன்படி வாக்களிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து அதிமுகவினர் வாக்களித்தனர். அதிமுகவினர் 34 பேர் கொண்ட குழுவினராக பிரிக்கப்பட்டு வாக்களித்தனர். அவர்களுடன் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேர் ஒரு குழுவிலும் 4 பேர் மற்றொரு குழுவிலும் இணைந்து கொண்டனர். அதாவது தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அதிமுக வேட்பாளர் ஒருவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராஜாவுக்கும் வாக்களித்தனர்
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: