ஞாயிறு, 23 ஜூன், 2013

வெள்ளத்தில் சிக்கியுள்ள பக்தைகளை கற்பழித்து கொலைசெய்யும் கொடூரன்கள்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிர் பயத்தில் உள்ள பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் கொடுமை அரங்கேறியுள்ளது. கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் கால்நடையாக செல்லும் பக்தர்கள், மலைகளிலும், வனப்பகுதிகளிலும் கிடைக்கும் இடங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி திருடர்களும், வழிப்பறி கொள்ளையர்களும் பக்தர்களிடம் உள்ள பணம், நகைகளை கொள்ளையடித்துச் செல்கின்றனர். கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள கோரிகுண்ட் பகுதியில் மட்டும் ரூ.17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனிக்கிழயன்று இரவு கோரிகுண்ட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பெண்பக்தர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு பெண்ணும், அவரது மகளும் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. மற்றொரு இடத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் யாத்தீரிகர் ஒருவர், பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பணம், நகைக்காக ஆங்காங்கே கொலை சம்பவங்களும் அரங்கேறி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: