லக்னோ: உ.பி.,யில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான, உதவித் தொகை வழங்கும்
திட்டத்துக்கான, விழாக்களுக்காக, 12 கோடி ரூபாயை, அம்மாநில அரசு செலவிட்ட,
பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ்
யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு, வேலை வாய்ப்போற்றோருக்கு, உதவித் தொகை
வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு
இல்லாதவர்களுக்கு, காசோலைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மொத்த
மதிப்பீடு, 8 கோடி ரூபாய்.இந்நிலையில், உதவித் தொகை வழங்குவதற்காக,
கடந்தாண்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விழாக்கள் நடத்தப்பட்டன.
"இந்த விழாக்களுக்காக, எவ்வளவு தொகை செலவிடப்பட்டது? அரசுக்கு எவ்வளவு
இழப்பு ஏற்பட்டது' என்பது பற்றிய தகவலை தெரிவிக்கும்படி, ஊர்வசி சர்மா
என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல்
செய்திருந்தார்.இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:கடந்தாண்டு, லக்னோ
உள்ளிட்ட பல இடங்களில், வேலை வாய்ப்போற்றோருக்கு உதவித் தொகை வழங்கும்
திட்டத்துக்கான விழாக்கள் நடத்தப்பட்டன.
இதற்காக, 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.இவ்வாறு, அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உ.பி., மாநில காங்., மூத்த தலைவர், ரீட்டா பகுகுணா கூறியதாவது:உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் மொத்த மதிப்பீடே, 8 கோடி ரூபாய் தான். ஆனால், இந்த திட்டங்களுக்கான விழாக்களை நடத்துவதற்காக, 12 கோடி ரூபாயை, உ.பி., மாநில அரசு செலவிட்டுள்ளது.இதுபோன்ற சம்பவம், வேறு எங்கும் நடக்கவில்லை. பொதுமக்களின் வரிப் பணத்தை, சமாஜ்வாதி அரசு, எந்த அளவுக்கு முறைகேடாக பயன்படுத்துகிறது என்பதற்கு, இது, சிறந்த உதாரணம். விரைவில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்காக, இதுபோன்ற வெற்று விளம்பர விழாக்களை, சமாஜ்வாதி கட்சியினர் நடத்துகின்றனர்.இவ்வாறு, ரீட்டா பகுகுணா கூறினார். dinamalar,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக