பாலாவை பெரிய டைரக்டர் என்று ஓவராக
புகழ்ந்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது :
புகழ்ந்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது :
அ. மார்க்ஸ் ஆவேசம்
பாலா
இயக்கியுள்ள புதிய படம் பரதேசி. நாளை 15-ந்தேதி இப்படம் வெளியாகிறது.
முன்னதாக நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் ஒன்று வெளியானது. அதில் காட்சிகளை
பாலா நடிப்பவர்களுக்கு விளக்கியதுபோன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது,
அவர் ஒருவரை எட்டி மிதிப்பது போன்றும், இன்னொரு காட்சியில் அதர்வா,
தன்சிகா உள்ளிட்டோரை காலால் எட்டி மிதித்து தள்ளுவது. கம்பால் கடுமையாக
தாக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.இதைப்பார்த்து பலரும் பாலா மீது சாடியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர். அ.மார்க்ஸ் நக்கீரன் இணையதளத்திற்கு இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார்.அவர்,
‘’ அந்த வீடியோவை பார்த்தேன். நடிப்பதற்காக இப்படி நடிகர்கள்
அடிவாங்குவதை பார்த்தபோது மனம் பதறியது. இந்த கொடூர ச்செயல் மிகவும்
கண்டிக்கத்தக்க விஷயம். ரொம்ப அநாகரிகமா நடந்துக்கிட்டிருக்காரு இயக்குனர்
பாலா. மிகவும் மோசமாக மனிதத்தன்மைக்கு அப்பார்ப்பட்டதாக
நடந்துகொண்டிருக்கிறார். திரைப்பட
கோட்பாடு என்று பார்த்தாலும் கூட காட்சிகளை தத்ரூபமாக அப்படியே திரையில்
இயக்கி காட்டுவது என்பதை சிறந்த திரைப்பட கோட்பாட்டாளர்கள் ஏற்பதில்லை.
பார்ப்பது திரைப்படம்தான் என்கிற உணர்வு பார்வையாளர்களுக்கு
இருக்கும்வரைதான் அந்தக்காட்சி குறித்து மனதில் அசைபோட்டு ஒரு விமர்சனமான
கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும். தத்ரூபமான காட்சி என்கிறபோது
காட்சியுடன் ஒன்றி பாத்திரங்களோடு அழுது அல்லது சிரித்து
விட்டுப்போய்விடுவார்களே ஒழிய அந்த காட்சி குறித்த ஒரு சிந்தனை
பார்வையாளர்களுக்கு ஏற்படுவதில்லை . அதனால்,
ஒரு நல்ல திரைப்பட கோட்பாட்டாளர்கள் தத்ரூபம் என்பதற்கு அதிகம்
முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாலாவின் இந்த செயல்பாடு ஒரு
நல்லத்திரைப்பட கோட்பாடும் அல்ல. அடிப்படையில் இது மனித உரிமைமீறல்.
முதலாளி தொழிலாளி பிரச்சனையாக பார்க்கவேண்டும். ;திரைப்படத்
துறையில் நிறைய எழுத்தாளர்கள் நுழைகிறார்கள். இவர்கள் எழுத்துத் துறையில்
வீர ஆவேசமாக பேசிக்கொண்டு மற்றவர்களை ஆமோதித்து எழுதிக்கொண்டிருப்பவர்கள்,
திரைப்படத் துறைக்குப் போய்விட்டால் மட்டும் கமல்சார், ரஜினிசார், பாலா
சார் என்று அவங்களுடைய தகுதிக்கு மீறி புகழ்வது...இப்படி
சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் புகழும்போது பாலா போன்றவர்களுக்கு திமிறும்
வந்துவிடுகிறது. குறிப்பாக பாலாவை பெரிய டைரக்டர் என்றும் ரியல் டைரக்டர்
என்று ஓவராக புகழ்ந்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது. இப்படி தொடர்ந்து
திரைப்பட தொழிலாளர்களை தாக்கி மனித உரிமை மீறும் வகையில் நடந்துகொண்டால்
சட்டரீதியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கவைக்கவும் தயங்கமாட்டோம்’’ என்கிறார்
எச்சரிப்பாக.cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2083
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக