கடந்த
2006 திமுக ஆட்சியின் போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற
சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றியது திமுக. சட்டத்தை கொண்டு வந்தது
மட்டும்மில்லாமல் தமிழகத்தில் மதுரை, திருவண்ணாமலை, திருச்சி என 6
இடங்களில் அர்ச்சக பயிற்ச pபள்ளிகளை திறந்தது. அதில் இருநூறுக்கும்
மேற்பட்ட மாணவர்கள் அப்பள்ளிகளில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். இரண்டு வருட
பயிற்சியை 206 மாணவர்கள் முடித்தனர்.இந்நிலையில்
சாமி சிலையை மற்ற சாதியினர் தொட்டால் தீட்டாகிவிடும், சிலையில் இருந்து
கடவுள் வெளியேறிவிடுவார் என அனைத்து சாதியினரும் அர்ச்சகாராகும் சட்டத்தை
எதிர்த்து மதுரை சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்தின் மூலம்
இச்சட்டத்துக்கு இடைக்கால தடை வாங்கினர். இதனால் இச்சட்டம்
கேள்விக்குறியானதோடு அர்ச்சகருக்கு படித்த மாணவர்களின் நிலையும்
கேள்விக்குறியாது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியும் இழுத்து மூடப்பட்டது. தடையை
உடைக்க கடந்த திமுக அரசு முயன்றபோது, அவ்வழக்கை எடுக்கவிடாமல் செய்தது ஒரு
தரப்பு.சிவாச்சாரியார்கள்
- தமிழக அரசுக்கு இடையிலான இவ்வழக்கில் தங்களையும் ஒரு பிரதிவாதியாக
வேண்டும்மென கேட்டு அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக மனித
உரிமை பாதுகாப்பு மையம் மனு தாக்கல் செய்து நீண்ட போராட்டத்துக்கு பின்
அவர்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொண்டது உச்சநீதிமன்றம்.5 ஆண்டுகளுக்கு பின் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு
வந்துள்ளது. கடந்த 30.1.13ந்தேதி நடந்த விசாரணையின் போது சிவாச்சாரியார்கள்
சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் பராசரன்னும், தமிழகரசு சார்பில்
ஜெவுக்கான வழக்குகளில் ஆஜராகும் பி.பி.ராவ்வும், அர்ச்சக மாணவர்கள் சங்கம்
சார்பில் பிரபல மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் காலின்கான்சலே ஆஜராகினர்.வரும்
13.3.13ந்தேதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ள நிலையில் அர்ச்சக மாணவர்கள்
வழக்கறிஞருக்கு பணம் தர முடியாத நிலையில் உள்ளனர். அதோடு, வழக்குக்காக
டெல்லி செல்லும் மாணவ பிரதிநிதிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல்
தடுமாறுகின்றனர். இதற்கு முன் இரண்டு முறை டெல்லி சென்றவர்கள் திருவண்ணாமலை
தொகுதி திமுக எம்.பி வேணுகோபால்க்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் தங்கி
வழக்கை கவனித்து விட்டு தமிழகம் திரும்பி வந்துள்ளனர் தற்போது
டெல்லி செல்லும் மாணவ பிரதிநிதிகள் வழக்கறிஞர்க்கு தர வேண்டிய பீஸ் தர
முடியாத நிலையில் இருப்பதால் மிக முக்கியமான இந்த வழக்கில் தாங்கள்
தோற்றுவிடுவோமோ என பயப்படுகின்றனர் அர்ச்சக மாணவர்களும், மனித உரிமை
பாதுகாப்பு மையத்தினரும். இந்த
வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு இந்தியாவுக்கு மிக முக்கியமானது. இந்த
தீர்ப்பு தந்தை பெரியாரின் கனவை நனவாக்கும்மா அல்லது பொசுக்குமா என்பது
தெரியும். ஆண்டாண்டு
காலமாக கருவறைக்குள் நுழை முடியாமலும், பிராமணர்களை தவிர மற்ற சாதியினர்
அர்ச்சகராக முடியாத நிலையிலும் இருக்கும் மக்களுக்கான வழக்குயிது. இதில்
தோற்றால் இன்னும் ஒரு பல நூற்றாண்டுகளுக்கு பிராமணர்களிடம் அடிமையாகவே
இருக்க நேரிடும். மனம் உள்ளவர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
சங்கத்திற்கு உதவினால் சிறப்பாகயிருக்கும் என கேட்கிறார் அச்சங்கத்தின்
மாநில தலைவர் ரங்கநாதன். து. ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக