கடந்த சில வருடங்களாகவே என் கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்து வருகிறது. பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்துக் கொண்டு எனக்கும், எனது மகள்களுக்கும், ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார், என்னையும், எனது 2 மகள்களையும் முழுமையாக புறக்கணித்து ஒதுக்கி வைத்திருக்கும் அவர், தற்சமயம் சென்னையில் உள்ள மகளிர் மேம்பாட்டு திட்ட ஒழுங்கு இணை ஆணையர் ராஜஸ்ரீயுடன் தொடர்பில் இருக்கிறார்.
இதை நான் பலமுறை கண்டித்தேன். அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தேன். ஆனால் அவர் கலெக்டராக இருந்ததால், யாரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.அண்மை காலமாக என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு, துன்புறுத்தி வருகிறார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு, ஜெயங்கொண்டம் ஆர்.டி.ஓ.-வாக அவர் பணியாற்றியபோது, சாமுண்டீஸ்வரி என்ற வருவாய் ஆய்வாளருடன் நட்பிலிருந்தார்.அங்கிருந்து சென்னைக்கு மாற்றலாகி சென்ற பின்னர், சாமுண்டீஸ்வரிக்கும் இடமாற்றம் செய்து தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்.
இது தொடர்பாக சாமுண்டீஸ்வரியின் கணவர், உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், சாமுண்டீஸ்வரி மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதால், அதுகுறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் என்னோடு சேர்ந்து வாழ எனது கணவர் செந்தில் குமாருக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவாதம் அளித்துள்ளார்.
செந்தில் குமார் மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவருடைய நடவடிக்கைகள் குறித்து செல்வ நாயகி, முதல்வருக்கு அனுப்பிய புகார் மனுதான் அவரது பதவிக்கு வேட்டு வைக்க முக்கிய காரணம் என்கிறார்கள்!
செய்தி & படம்: எம். ராமசாமி
vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக