புதுடில்லி : "" எதிர்காலத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும், போர்
நடப்பதற்கு, மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளன,'' என, தேசிய பாதுகாப்பு
ஆலோசகர், சிவசங்கர் மேனன் கூறினார். டில்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில்,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் பங்கேற்றார். அவரிடம்,"அடுத்த,
30 ஆண்டுகளில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடப்பதற்கான வாய்ப்பு
உள்ளதா?' என, செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அவர் அளித்த பதில்:
எதிர்காலத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடப்பதற்கான வாய்ப்பு,
மிகவும் குறைவு. இரு நாடுகளுக்கும் இடையே, பல, 1,000 ஆண்டுகளாக, கலாசார
ரீதியிலான உறவும், தொடர்பும் உள்ளது. எனவே, போர் நடப்பதற்கு வாய்ப்பு
இல்லை.சமீபத்தில் கூட, இரு நாடுகளுக்கும் இடையே, கடற்பாதுகாப்பு
தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தன. இரு நாடுகளுக்கும் இடையே, நல்ல உறவு
இருப்பதை, இதன்மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, சிவசங்கர் மேனன்
கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக