எவிடன்ஸ் என்னும் அரசுசாரா நிறுவனம் கோவில்களில் தலித்துகளுக்கு
மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை சில
வருடங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த புள்ளிவிவரம் இந்த ஆண்டும் எந்த
முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும்,இந்த கணிணி யுகத்திலும் தொடர்கிறது
என்று கண்டறியப்பட்டுள்ளது..
85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில்
அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில்
வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள்
வடம் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள்
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது,
தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது 60 கோயில்களில் பாகுபாடு
காட்டப்படுகிறது.
பாதிரியார்கள், பூசாரிகளால் பாகுபாடு காட்டப்படும் கோயில்கள் 65 என்கிறது அப்புள்ளிவிவரம்.
இது போன்ற சாதிய பாகுபாடுகள் நமது இந்து கோவில்களில் மட்டும் அல்ல, கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் இருக்கின்றன என்பதும் உண்மை.
'தலித்' என்று ஒரு வரியில் சொன்னாலும், பள்ளர்,பறையர் என்று சாதிய
வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியிலும் இருக்கின்றன.
இத்தைகைய வேறுபாடுகளை களைவதற்கு பதில், ஒவ்வொரு பிரிவும் ஒரு 'தலைவருடன்' , தங்களுக்குள்ளாகவே மேலும் பிளந்து இருக்கிறார்கள். கிராமப்புற தலித் மக்களுக்கு அரசு தரும் பல்வேறு சலுகைகளையும், இடஒதுக்கிடு போன்ற வாய்ப்புகளையும் பற்றி, அவர்களுக்கே முழுமையாய் தெரியவில்லை என்பதும், அதற்க்கான வாய்ப்புகள் பற்றி மருந்துக்கு கூட தெரியவைக்காமல், அந்த மக்களை வெறும் 'வாக்கு வங்கி'களாக முன்னேற்றுவதில் பெரும்வெற்றி கண்டிருக்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள் அனைவரும். தங்களை தலித் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியவாதிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன். (நன்றி, இனி, அடுத்தவாரம்)-இன்பா idlyvadai.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக