இம்மாதம் 15-ம் தேதி ரிலீசாக போகிறது பாலாவின் பரதேசி. வழமையாக பாலா ஒரு
படத்தை முடித்து தியேட்டருக்கு அனுப்பும்போது, ஊரெல்லாம் கடன்வாங்கி, அவரே
கிட்டத்தட்ட ஒரு ‘பரதேசி’ ஸ்டேஜூக்கு வந்து விட்டிருப்பார்.
ஆனால் இப்போது, ஆளே மாறிவிட்டார். இந்த பரதேசி, பாலாவை பரதேசி ஆக்கவில்லை.
ஒவ்வொரு முறை இவர் படம் எடுத்து அது தியேட்டருக்கு வரும்போதும் இவர்
கடனாளியாகி நிற்பார். முதல் பிரதி அடிப்படையில் படம் இயக்கி தரும் பாலா,
தான் சொன்ன பட்ஜெட்டை தாண்டி பணம் கரையும் போது, தன் செல்வாக்கை வைத்து
ஊரெல்லாம் கடன் வாங்கி படத்தில் போடுவாராம்.
இப்படி செய்து செய்தே கடனாளியானவர், பரதேசியை சொந்தமாகவே தயாரிக்க
முடிவு எடுத்தபோது, “தொலைந்தார் இவர்” என்று ஊகம் செய்தவர்கள் பலர்.
ஆனால் இந்த படத்தின் பட்ஜெட்டும் பாலாவின் கையை மீறி போகவில்லை.
படத்தையும் 90 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். வியாபாரமும் படு
அமர்க்களம். “இது கோடம்பாக்கம்தானா… இவர் பாலாதானா..?” என்று அவரது
அசிஸ்டென்ட்களே வியக்கும் அளவுக்கு, எவ்ரிதிங் அன்டர் கன்ட்ரோல்!
பிரிட்டிஷ்காரன் காலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பட்ட அவஸ்தைதான் படத்தின் கதை. இந்த கதை பாலாவை தேடி வந்ததே, மற்றொரு சுவாரசியமான கதை!
தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த ஆச்சார்யா ரவி படம் ஒன்றை இயக்க போவதாக கேள்விப்பட்ட பாலா, “என்னய்யா உம் படத்தின் கதை?” என்று காஷூவலாக கேட்டிருக்கிறார்.
அந்த கதை ஒரு நாவலாக வெளியானது. கதையை கேட்ட பாலாவுக்கு அதன் தீம் கிளிக் ஆகிவிட, “அந்த கதையை நீ எடுத்தா கெடுத்து குட்டிச்சுவராக்கிடுவ… நானே எடுத்துடுறேன்’” என்றாராம் பாலா.
ஒருவகையில் அது உண்மைதான் என்பதை உணர்ந்த ரவியும் நாவலை அவர் கையில் கொடுத்துவிட்டு அதே படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக தன்னை இணைத்துக் கொண்டார்.
இப்படி பரதேசி உருவான கதையே பரபரப்பாக இருக்க, அதைவிட ஆச்சரியமாக, பாலாவை கடனாளி ஆக்காமல் பரதேசி முடிந்து தயார் நிலையில் நிற்கிறது. இதில் கிடைத்த சுமார் ஐந்து கோடி ரூபா லாபத்தை முன்பணமாக போட்டு சென்னையின் மையப்பகுதியான போயஸ் கார்டனில் வீடு வாங்கியிருக்கிறாராம்.
முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோர் குடியிருக்கும் பகுதி இது. அந்த ராசியில், அடுத்து ஒரு அரசியல் படம் எடுப்பாரோ! viruviruppu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக