புதன், 13 மார்ச், 2013

360 கோடி ஹெலிகாப்டர் ஊழல் : விமானப்படை முன்னாள் தளபதி தியாகி மீது எப்ஐஆர் பதிவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி-: இத்தாலி ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, முன்னாள் மத்திய அமைச்சரின் சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ இன்று எப்ஐஆர் பதிவு செய்தது. மேலும் டெல்லி, குர்கான், சண்டிகரில் உள்ள 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகள் உபயோகத்துக்காக இத்தாலியை சேர்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.3600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த 2010ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக இந்தியர்கள் சிலருக்கு ரூ. 360 கோடி லஞ¢சம் இத்தாலி நிறுவனம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ராணுவ அமைச்சர் அந்தோணி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து முதல்கட்ட விசாரணை அறிக்கையை சிபிஐ தயார் செய்தது.


ஹெலிகாப்டர் டெண்டரில் மாற்றம் செய்த அப்போதைய விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி, லஞ்சப்பணம் கைமாற உதவியாக இருந்த ஏரோமெட்ரிக்ஸ் நிறுவன தலைவர் உள்பட பலரது பெயர்கள் அதில் இடம் பெற்றிருந்தது. தியாகி மற்றும் ஏரோமெட்ரிக்ஸ் தலைமை அதிகாரியிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல தகவல்கள் கிடைத்தன. இதற்கிடையில் இத்தாலி நிறுவனத்திடமிருந்தும் பல ஆவணங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் இன்று சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. அதில் எஸ்.பி.தியாகி, காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியாவின் சகோதரர் சதீஷ் பக்ரோடியா ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர டெல்லி, குர்கான் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் 14 இடங்களில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தியாகி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: