வெள்ளி, 28 செப்டம்பர், 2012

புலிகளை அழிக்க உதவியதற்கு நன்றி

Viruvirupu
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளின் 55-வது வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்புவில் இடம்பெற்ற வைபவத்தில், விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடிப்பதற்கு உதவியதற்காக சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது இலங்கை அரசு.
இரு நாடுகளும் கடந்த 55 ஆண்டுகளாக ராஜதந்திர உறவுகளை பேணி வருவதாகவும், முன்பைவிட தமக்கிடையே நெருக்கம் அதிகமாகி உள்ளதாகவும், கொழும்புவுக்கான சீனா தூதுவர் ஊ ஜின்காவோ தெரிவித்தார். இரண்டு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயற்பட தற்போது அதிக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசின் சார்பில், இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய இலங்கை அமைச்சர் டி.இ.டபிள்யு. குணசேகர, “முள்ளிவாய்காலில் முடிந்த யுத்தத்துக்கு சீனா வழங்கிய உதவிகள் ஏராளம்.  புலிகளை அழிப்பதற்கு சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
சீனாவுடன் இலங்கை, மேலும் நெருக்கத்தை பேணுவதற்கு தற்போது பாதை திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் குறிப்பிடும் ‘பாதை’ திறப்பதற்கு உதவிய தமிழக அரசியல்வாதிகள் யாருக்கும் அவர் நன்றி தெரிவிக்கவில்லை என்பதே ஒரேயொரு நெருடல். மரியாதை கருதி, குறைந்தபட்சம் தமிழக முதல்வருக்கும், சீமானுக்குமாவது நன்றி தெரிவித்திருந்தால் கௌரவமாக இருந்திருக்கும்.

கருத்துகள் இல்லை: