ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

த்ரிஷாவுக்கு ராணா குடும்பத்தார் எச்சரிக்கை?

தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா. ராமாநாயுடுவின் பேரனான இவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ. இந்த நேரத்தில் இவரும், த்ரிஷாவும் காதலித்து வருவதாக பரவியுள்ள செய்தியால், ராணாவின் குடும்பத்தார் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனால் அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார்கள்.முன்பெல்லாம் ஐதராபாத் செல்லும்போதெல்லாம் ராணாவின் ஹெஸ்ட் ஹவுசில்தான் தங்குவார் த்ரிஷா. அப்படியே அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றுவதும் உண்டு. ஆனால் முதலில் அதை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள், இப்போது காதல் கீதல் என்று செய்தி பரவியதால் உஷாராகி விட்டனர். எக்காரணம் கொண்டும் த்ரிஷாவுடன் பழகக்கூடாது, நடிக்கக்கூடாது என்றும் கூறி வருகிறார்களாம். அதோடு, த்ரிஷாவுக்கும் போன் போட்டு இனி ராணாவுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று எச்சரித்திருக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை: