வியாழன், 27 செப்டம்பர், 2012

சேலத்தில் தாய்- மகளை பட்டப் பகலில் கொன்று 100 பவுன் நகை கொள்ள

சேலத்தில் பட்டப் பகலில் தாய், மகள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீட்டில் இருந்த 100 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை நாகையர் தெருவை சேர்ந்த சேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி ராணி தமது மகள்களுடன் மாமனார் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். நேற்று மாமனார், ராணி மற்றும் மகள் சங்கீதா ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். ராணிக்கு அவரது உறவினர்கள் பல முறை போன் செய்துள்ளனர். ஆனால் போன் எடுக்கப்படவில்லை. இதனால் அவரது உறவினர் ராஜாராம் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராணியும், சங்கீதாவும் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருவரின் கழுத்தில் இருந்த நகைகளும், வீட்டில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுனுக்கும் மேலான நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது 89 வயது மாமனார் ராமச்சந்திரன் இருந்துள்ளார். காது மற்றும் கண்பார்வை குறைபாடுடையவர் என்பவரால் இதனை அவரால் உணரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை ராணியின் வீட்டுக்கு வெள்ளை பையுடன் வந்த 4 பேர்தான் கொலைகாரர்களாக இருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் நகரத்தில் பகல் நேரத்திலேயே நகைகளுக்காக தாய்- மகள் கொல்லப்பட்டிருப்பது இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராணியின் வீட்டுக்கு நேற்று பகலில் வெள்ளை பையுடன் 4 பேர் வந்ததாகவும், நகை, பணத்திற்காக ராணி, சங்கீதா ஆகியோரை அவர்கள் தான் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேலத்தில் பட்டப்பகலில் தாய், மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: