வெள்ளி, 28 செப்டம்பர், 2012

நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிகள் படப்பிடிப்பு

மலையாள நடிகை சுவேதா மேனன் தமிழில் ‘நான் அவன் இல்லை, ‘சாது மிரண்டால், ‘அரவான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.சுவேதாவுக்கும் மும்பை பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. பின்னர் சுவேதா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்த்தனர்.நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பிணி பெண் நடவடிக்கைகள், குழந்தை பெறும் போது அவர் தாங்கும் வலிகள் பற்றிய கதையாக ‘களிமண்ணு’ என்ற மலையாள படம் உருவாகி வருகிறது.
பிளஸி இயக்குகிறார். இப்படத்தில் சுவேதா மேனன், பிஜுமேனன் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்துக்காக சுவேதா மேனனின் பிரசவ காட்சி நேற்று நேரிடையாக படமாக்கப்பட்டது.

20 நிமிடங்கள் இக்காட்சி படமானது. குழந்தை பிறந்தவுடன் அக் குழந்தையை சுவேதா அன்பாக முத்தமிடும் காட்சியும் படமானது. ஒளிப்பதிவாளர் ஜிபி ஜேக்கப் மற்றும் 2 உதவியாளர்கள், சுவேதா கணவர் ஸ்ரீவல்சன் ஆகியோர் பிரசவத்தின் போதும் காட்சி படமான போதும் உடனிருந்தனர். இதுபற்றி சுவேதா,‘பெண்கள் குழந்தை பெறும் தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அந்த உணர்வை சக பெண்களிடம் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் இக்காட்சியை எடுக்க ஒப்புக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

கருத்துகள் இல்லை: