வியாழன், 27 செப்டம்பர், 2012

பெரியார் Film.. இளையராஜா தலித் சமூகத்தின் துரோகியானார்.

 பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்ததன் மூலம் தன்னை சனாதனக்கூட்டத்தின் விசுவாசி என்று உறுதி செய்தார். வேட்டியும் செருப்பும் அணிய முடியாமல் குறைந்தபட்ச மானமுள்ள மனிதனாகக் கூடவாழ முடி யாமல் கிடந்த தமிழக தலித் சமூகம் தலைநிமிர வழிசெய்த பெரியாருக்கு ஒரு தலித்தே துரோகம் செய்தது கண்டு பார்ப்பனக் கூட்டம் குஷியானது. இளையராஜா தலித் சமூகத்தின் துரோகியானார்.

1975ல் அன்னக்கிளியில் தொடங்கிய இளைய ராஜாவின் பயணம் திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் தொடர்ந்தது. தமிழ்ச்சினிமாவின் இசைப்பாதை இவருக்கு என்றே திறந்து கிடந்தது.
ஆனால் அவரது பயணத்தின் பாதையில் இரண்டு புறங்களிலும் இருந்த மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த பார்ப்பனீயப்பேய்கள் பல்லை இளித்து பயங்காட்டி அவரை விரட்டப் பார்த்தன என்பது வரலாறு. இன்றைக்கு அவரை ஒரு மேதை என்று பேசுகின்ற பல மேல்சாதி 'சங்கீத தெர்மாமீட்டர்'கள் அன்று அவரை ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே பார்த்தவர்கள். சுப்புடு போன்ற 'சங்கீத பாராமீட்டர்'கள் எப்படியாவது அவரை திரையுல கிலிருந்து துரத்திவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சதிகளும் சாகசங்களும் ஏராளம். ஆனால் இளையராஜாவின் பெயர் தமிழ்மக்களின் வீடுகளில் தண்ணீரைப் போல் சாதாரணமாக புழங்க ஆரம்பித்தது கண்டு, கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்த பார்ப்பனர்கள், பொழைக்கிற வழியைப் பார்த்தார்கள். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே வண்டுமுருகன் (வடிவேலு) கட்சி மாறி சைக்கிளில் உட்கார்ந்து டாட்டா காமிக்கிறது மாதிரி, இவர்களும் இளையராஜாவை சடுதியில் இசைஞானி என் றும், இசைத்துறவி, இசைச்சாமியார், இசைப்பூசாரி, சக்ர வர்த்தி, மெழுகுவர்த்தி என்று தலையில் தூக்கி ஆட ஆரம் பித்தார்கள். ஒரே காரணம் - போஸ்டரில் இளையராஜா பேர் இருந்தால் படம் கண்டிப்பாக நூறு நாள் ஓடும், கல்லாப் பெட்டி நிரம்பி வழியும். இங்கேதான் சனியன் பிடித்தது.
இளையராஜா பார்ப்பனீய துதிபாடிகளின் வலை யில் விழுந்தார்.
சாமானிய மக்களிடமிருந்து விலக ஆரம் பித்தார். 'ஜனனி ஜனனி, அகம் நீ', 'முதலே முடிவே, மூகாம்பிகையே', 'என் பாவக்கணக்குக்கு பட்டியல் போட் டால் சொல்ல நடுங்குதம்மா' என மேல் சாதி கடவுள்களின் அருள்வேண்டி கீதவழிபாடு கேசட் போட்டார்; அவர்களை இறைஞ்சி மனம் உருகி எழுதிய பாடல்களுக்குத் தானே இசை அமைத்து கச்சேரி செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட கோடிக்கணக்கில் நிதி, மூகாம்பிகை கோவில் யாத்திரை என மேல்சாதி வேடம் போட ஆரம்பித் தார். 'ரமணமணிமாலை' பாடினார். மறந்தும்கூட சிறு தெய் வங்கள், தனது கிராமம், உழைக்கும்மக்கள் பற்றி பேசியது இல்லை. முக்கியமாக, மக்கள் பிரச்னைகளைப் பேசி உரிமைக்குரல் எழுப்புகிற,ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பேசுகின்ற தனது அண்ணன் பாவலர் வரதராசனின் பாடல் களையும், அதேபோல் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் முழங்குகின்ற பாப் டில்லான் போன்ற மக்கள் பாடகர்களின் இசையையும் "அந்தக் குப்பைகளை ஏன் கிளறுகின்றீர் கள்?" என்று எடுத்தெறிந்து இழிவாகப்பேச ஆரம்பித்தார். நாட்டார் இசை வடிவங்கள்தான் தனக்கு வழியை காண்பித் தன, மக்களின் ஆதரவைக் கொடுத்தன, கேசட்டுகளாக லட்சக்கணக்கில் விற்று தனது வயிற்றை நிறைத்தன என் பதை மறக்க ஆரம்பித்தார். "தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை சோப்பு போட்டுக் குளித்தாலும் சுத்தம் ஆகமாட்டார்கள்" என்று கொழுப்பெடுத்துப்பேசிய கோவணாண்டிகளின் படங்களை தினமும் பூஜை செய்ய ஆரம்பித்தார், ஆதிசங்கரரை கும்பிடுவதாக எழுதினார். கோடம்பாக்கத் தின் மேல்சாதி வட்டாரமும் சபாக்கச்சேரி வட்டாரமும் இப்போது அவரை ஆஹா ஓஹோ என்று கொண்டாடத் தொடங்கின. சுஜாதா போன்ற 'அறிவாளி' விஞ்ஞானிகள் இவரது புகழ் பாடினார்கள்.

தலித்துகளை ஏற்கனவே நாயினும் கீழாக வைத்தி ருக்கின்ற பார்ப்பனக்கூட்டத்தின் முகத்தில் காறி உமிழ் வதை விட்டுவிட்டு, 'திருவாசகம்' என்ற தனி ஆல்பத்தில் தன்னை 'நாயினும் கீழோன்', 'கடையோன்' (நாயிற் கடை யாய்க் கிடந்த அடியேற்கு..என்ற திருவாசகப்பாடல்) என்று இளையராஜா தன்னை அழைத்துக் கொண்டார். இவ்வாறு தன்னை நாயினும் கீழோன் என்று தாழ்த்திக்கொண்ட தால்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான (நவரத்தினங்களில் ஒன்று) எண்ணெய் இயற்கை எரிவாயுக் கமிஷன் (ளிவீறீ ணீஸீபீ ழிணீtuக்ஷீணீறீ நிணீs சிஷீனீனீவீssவீஷீஸீ) இந்த பாடல் தகட்டின் ஸ்பான்சராக இருந்தது.அதாவது மக்கள் பணத்தை சூறையாடியது! பொதுத்துறை வங்கிகளும் நிறுவனங் களும் கடந்த சில வருடங்களாக கூச்சநாச்சம் ஏதுமின்றி இந்த வேலையை தந்திரமாக செய்து வருகின்றன. இதே போல் இஸ்லாமிய, கிறித்துவ, தலித் சமூகத்தினரின் பாடல் களோடு, தந்தை பெரியார், அம்பேத்கரின் போதனைகளை யும் கேசட்டுக்களாக, குறுந்தகடுகளாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் மத்தியரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்! 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, ஐயனே' என்று பிச்சைப்பாத்திரமும் ஏந்தினார். 35 வருடங் களுக்கு முன் 'ஆதி பராசக்தி' என்ற படத்தில் வந்த 'ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா, ஆழாக்கு அரிசிய பாழாக்க வேண்டாம், தின்னுப்புட்டு போடியம்மா' என்று சோறு ஆக்கி வைத்து 'ஏய், வந்து தின்னுட்டுப் போறியா இல்லியா?' என்று சாமியையே அதிகாரம் பண்ணுகிற அந்தப்பாட்டு எத்தனையோ மேல் அல்லவா!

உச்சகட்டமாக, ஞான.ராஜசேகரன் இயக்கிய 'பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்ததன் மூலம் தன்னை சனாதனக்கூட்டத்தின் விசுவாசி என்று உறுதி செய்தார். வேட்டியும் செருப்பும் அணிய முடியாமல் குறைந்தபட்ச மானமுள்ள மனிதனாகக் கூடவாழ முடி யாமல் கிடந்த தமிழக தலித் சமூகம் தலைநிமிர வழிசெய்த பெரியாருக்கு ஒரு தலித்தே துரோகம் செய்தது கண்டு பார்ப்பனக் கூட்டம் குஷியானது. இளையராஜா தலித் சமூகத்தின் துரோகியானார்.

திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் மனித மலத்தை திணித்தபோதும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துக்களில் தலித்து கள் தலைவராவதற்கு ஆதிக்கசாதி வெறியர்கள் மறுத்து அவமதித்தபோதும், தான் பிறந்த அதே மாவட்டத்தில் உத்தப்புரம் என்ற ஊரில் சுவர் கட்டி தலித்துகளை ஆதிக்க சாதிக் கூட்டம் கேவலப்படுத்தியபோதும் இளையராஜா போன்ற தலித் சமூகத்தவர்கள் வாய் திறக்க மறுப்பது துரோகம் எனில், பார்ப்பன வேசம் போடுவது அதனினும் துரோகம்.

ஏற்கனவே தாழ்ந்த குலத்தில் பிறந்தவரென நந்தனாரை நாயை விடவும் கேவலமாக நடத்திய பார்ப் பனக்கூட்டம் தந்திரம் செய்து நந்தனை தீயில் தள்ளி 'அவன் ஜோதியில் கலந்துவிட்டான்' என்பதாக கதை திரித்தது. மேல்சாதியை மறுத்த, பிள்ளைமார் வகுப்பில் பிறந்த வள்ள லாருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. அவரும் ஒரு நாள் 'ஜோதியில் கலந்தார்'. இது இன்று நேற்று கதை அல்ல, ஏகலைவன், கர்ணன், சம்பூகன், குகன், ராவணன் என்று காலங்காலமாக 'ஜோதியில்' கலந்தவர்கள் ஏராளம். ராசையாவின் கதை இப்படிப் போனது.

இளையராஜாவும் அப்துல் கலாமும் மறந்துவிட்ட அல்லது தெரியாததுபோல் நடிக்கின்ற ஒரு உண்மை உண்டு - என்னதான் திருவாசகம், மூகாம்பிகை, தயிர்ச்சாதம், பகவத் கீதை என்று வேசம் போட்டாலும், ராசைய்யாவும் கலாமும் கருவறைக்கு உள்ளே போக முடியாது. பூணூல் போட்டாலும் பார்ப்பனக்கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. தனது குலத்தில் பிறந்தாலும் பாரதியாரையே ஒதுக்கி வைக்கத் தயங்காத கூட்டம்தான் அது.
 http://paarima.blogspot.com/2009/09/blog-post_29.html

கருத்துகள் இல்லை: