சனி, 29 செப்டம்பர், 2012

தற்கொலைக்கு முயன்ற பாக். வெளியுறவு அமைச்சர் ஹீனா

 hina attempted suicide over husband infidelity கணவரின் கள்ளக்காதலை கண்டுபிடித்தவுடன் தற்கொலைக்கு முயன்ற பாக். வெளியுறவு அமைச்சர் ஹீனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தனது கணவர் பிரோஸ் குல்சாரின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்தவுடன் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக வங்க தேச பத்திரிக்கை பிளிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தனது கள்ளக்காதலனான அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவை மணப்பதில் தீவிரமாக உள்ளார். இதற்கிடையே ஹீனாவின் கணவர் பற்றிய செய்தியை பிளிட்ஸ் வெளியிட்டுள்ளது. ஹீனாவின் கணவர் பிரோஸ் குல்சார் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை ஹீனா கண்டுபிடித்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த ஹீனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரத்திற்கு பிறகே கணவன் மனைவி இடையே இருந்த நம்பிக்கை கெட்டுவிட்டதாம்.ஹீனாவும் பிலாவலும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இன்டர்நெட்டிலும் மணிக்கணக்கில் சாட் செய்வார்களாம். பிலாவலுடன் இவ்வளவு நேரம் என்ன சாட் செய்வாய் என்று கேட்டால் அரசியல் விவகாரங்களைப் பற்றி பேசுவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளாராம்.
இந்நிலையில் பிலாவலை மணந்தே தீருவேன் என்று ஹீனா தனது கணவர் மற்றும் சர்தாரியிடம் சண்டைபோடுகிறார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: