ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

Gujarat,Himachal தேர்தலில்களில் அன்னா குழு போட்டி

 Will Team Anna Contest Polls Gujarat Decision Soon குஜராத், இ. பி. பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அக்னி பரீட்சைக்கு தயாராகிறது அன்னா குழு?

டெல்லி: அரசியலில் குதிப்பது என்று முடிவு செய்துவிட்ட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழு முதல் கட்டமாக இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தமது பலத்தை தெரிந்து கொள்ளலலாமா? என்ற யோசனையில் மூழ்கியுள்ளது.
வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அன்னா ஹசாரே குழு வலியுறுத்தி வந்தது. ஆனால் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமோ அன்னா குழுவைக் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது என அன்னா ஹசாரே குழு முடிவு செய்தது. அதே நேரத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுக்கும் எதிராகவே அன்னா ஹசாரே குழு குரல் கொடுத்து வரும் நிலையில் பாஜக ஆளும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்லது.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கர்நாடக மாநில தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல்களில் போட்டியிட்டு தங்களது பலத்தை அறிந்து கொள்ளலாமா? என்ற யோசனையில் அன்னா ஹசாரே குழு மூழ்கியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அன்னா ஹசாரே குழுவின் உறுப்பினர் சாந்தி பூசன், பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். அனன ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கூட்டம் கூடி இது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: