பிழிந்து எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை
வெளியேற்றி விடுவார்கள் : ராதாரவி பேச்சு
மதுக்கூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுக்கூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஒன்றிய
செயலாளர் துரை செந்தில் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முகம து ஷெரீப்
வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் வைத்தி
லிங்கம், நடிகர் ராதா ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.;நடிகர் ராதாரவி
பேசியபோது,சீதையை ராவணன் தூக்கிச் சென்றார். சீதையை நெருங்க முடிய வில்லை. அதனால் அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு அவர்கள் ராமர் ரூபத்தில் போங்கள் என்றனர். ராவணனும் ராமர் ரூபத்தில் சீதையிடம் சென்றான். பாதியிலே திரும்பி வந்து விட்டான். ஏன் திரும்பி வந்து விட்டீர்கள் என்று எல்லோரும் கேட்டனர். அதற்கு ராவணன், ராமர் ரூபம் எடுத்ததும் நான் நல்லவனாகி விட்டேன். எனக்கு கெட்ட புத்தி வரவில்லை என்றான். அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி. ஆர். ஆரம்பித்த இயக்கம். இந்த கழகத்தில் இருப்பவர்களுக்கு கெட்ட புத்தி, கெட்ட எண்ணம் இருக்காது. வராது. அதனால் தான் குடும்பம் குடும்பமாக அ.தி.மு.க. விற்கு ஓட்டு போடுகிறார்கள். உழைப்பவனுக்கு மரியாதை கிடைப்பது அ.தி.மு.க. வில்தான். தி.மு.க.வில் தொண்டனை கரும்பு ஜுஸ் பிழிவதை விட அதிகமாக பிழிந்து ஜுஸை (சக்தி) யை எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை வெளியேற்றி விடுவார்கள்.
டெசோ மாநாடு நடத்தப் போவதாக கூறி மக்களை குழப்பி வருகிறார் கருணாநிதி. காங்கிரஸ்காரர்கள் குழப்பி போய் இருக்கிறார்கள்.
கருணாநிதி தானும் குழம்பி தன்னை சார்ந்தவர் களையும் குழப்பி வருகிறார்.
பிரதமராகும் தகுதி அம்மாவுக்கு மட்டும் தான் இருக்கிறது. அம்மாவின் பாதம் மட்டும் பார்த்து நடக்க கூடியவர்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்’’என்று பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக