வேலூர் தொரப்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆரணி 28 வயது இளம்பெண்.
இவர், நேற்று ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில்
கூறியிருப்பதாவது: பிசியோதெரபி முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனது பெற்றோருடன் கடந்த
2005ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி விஏகே நகரில் வசித்தபோது,
ஆரணியில் பாதிரியார் படிப்புக்காக வந்த சித்தூர் காந்தி நகர் பகுதியை
சேர்ந்த டால்வின் கிறிஸ்டிதாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர்
இருவரும் காதலித்தோம். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக
ஆசைவார்த்தை கூறி, என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்தார். இதனால் கர்ப்பம்
ஆனேன்.இதையறிந்த டால்வின், பாதிரியார் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாத்திரை வாங்கி கொடுத்து கருகலைப்பு செய்தார். இந்நிலையில் கடந்த 3.5.2012 அன்று சித்தூரை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார். இதனை டால்வினிடம் தட்டிக்கேட்டதற்கு, என்னை தொந்தரவு செய்தால் உன்னையும் உன் குடும்பத்தையும் ஒழித்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாதிரியார் டால்வினை கிறிஸ்டிதாஸை நேற்று கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக