சென்னை: பிரசன்னாவுக்கு யாரிடமும் வாய்ப்பு கேட்டு வாங்குவதில்லை
என்றார் சினேகா. பிரசன்னா, சினேகா காதல் திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே
‘அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இவர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
திருமணத்துக்கு பிறகு விளம்பர படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து
நடிக்கின்றனர். பிரசன்னாவுக்கு சினேகா வாய்ப்புகளை கேட்டு வாங்குவதாகவும்,
அவருக்கு வாய்ப்பு தந்தால்தான் நான் நடிப்பேன் என்று நிபந்தனை
விதிப்பதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி சினேகா கூறியதாவது: நாங்கள்
இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு கிடைக்கும்
கவுரவமாக கருதுகிறேன். இது மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் இருக்கிறது.
இதுதவிர நாங்கள் இருவரும் பல்வேறு பணிகளில் இணைந்திருக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வீட்டில் சமையல் செய்வோம். ஒன்றாக நடிக்கும்போது, ஏதாவது ஒரு காட்சியில் சந்தேகம் ஏற்பட்டால் அவரிடம் கேட்டு அதன்படி நடிப்பேன். தினமும் நடக்கும் நிகழ்வுகளை இருவரும் பகிர்ந்துகொள்வோம். திரையில் எங்கள் இருவருக்கும் எப்படி கெமிஸ்ட்ரி பொருந்துகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் எங்களை ஜோடியாக பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். ‘இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பீர்களா என்கிறார்கள். அதற்கான நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்போம். யாரிடமும் போய் பிரசன்னாவுக்கு நான் வாய்ப்பு கேட்பதில்லை. அப்படி வரும் தகவல்களில் உண்மை இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக