டெல்லி:
இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்
ராஜசேகரன் பிள்ளை தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தொலைதூரக் கல்வித்
திட்டத்தின் கீழ் பாடம் நடத்த 2 தனியார் பல்கலைக்கழங்களுக்கு அனுமதி
வழங்கியுள்ளது குறித்து அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் ராஜகேசரன் பிள்ளை. அவர் கடந்த 2007ம் ஆண்டு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் பாடம் நடத்த பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகம் ஆகிய 2 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி அளித்துள்ளார்.
இதையடுத்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக ராஜசேகரன் பிள்ளை மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் அவர் பெரிய அளவில் முதலீடுகள் செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தொலைத்தூரக் கல்வி கவுன்சில் தலைவராகவும் இருந்த பேராசிரியர் ராஜசேகரன் பிள்ளை அந்த 2 பல்கலைக்கழங்களுக்கு தொலைதூரக் கல்வித் திட்டன்தின் கீழான பாடத்திட்டத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார் என்று அவரிடம் விசாரித்தோம். அந்த பல்கலைக்கழங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக அவர் பணம் ஏதாவது வாங்கினாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அந்த 2 பல்கலைக்கழங்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்த்து வருகிறோம் என்றார்.
இந்த பாடத்திட்டதின் மூலம் சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகம் ரூ.300 கோடியும், பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ரூ.1,200 கோடியும் சம்பாதித்துள்ளன என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவி்த்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக