jism-2
தான் அந்தப்படம். 'சீன் இல்லை’ என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டாலும், வசூலில் குறைவில்லை. சன்னி
லியோனின் இந்தியத் திரைப்பிரவேசம் கடைசியாக நிகழ்ந்தே விட்டது.
நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை
வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை,
பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக்
பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை
தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ். முன்பாகவே நான்கு முறை இந்தியாவுக்கு வந்திருந்தாலும், இது ஸ்பெஷல் வருகை.
சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான,
கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க
அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான
மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென
தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக்கு கொண்டுவருவதாகக் கூறி, கலர்ஸ் தொலைக்காட்சியின் உரிமையை ரத்து செய்ய வேண்டுமென்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தை நெருக்கினார்கள்.
சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக்கு கொண்டுவருவதாகக் கூறி, கலர்ஸ் தொலைக்காட்சியின் உரிமையை ரத்து செய்ய வேண்டுமென்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தை நெருக்கினார்கள்.
தன் தொழில் குறித்த நேர்மையான பார்வை லியோனுக்கு உண்டு. adult industry என்று
ஆங்கிலத்தில் ‘நீட்’டாக சொல்லப்பட்டாலும், மொழிபெயர்த்தால் ‘பாலியல் கண்காட்சி’
என்று ஒருமாதிரியான தொழில் அவருடையது. அதாவது porn actress. மிகச்சரியாக
சொல்லவேண்டுமானால் ‘ஷகிலா’ மாதிரி. ஹாலிவுட் நடிகைகளை மாதிரி பெரிய உயரம் இல்லை. ஐந்தரை
அடிக்கும் குறைவுதான். ஆனால் நல்ல கலர். செம கட்டை என்று உலகமே ஒத்துக்கொள்ளும்
உடல்வாகு.
“இந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் விலகும்போது, தாங்கள் கடவுளை உணர்ந்துவிட்டதால்
விலகுகிறோம் என்கிறார்கள். உண்மையில் கடவுள் என்பவர் எல்லோருடனும், எப்போதும்
இருக்கிறவர். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள். எந்த மதமுமே adult சமாச்சாரங்களை படம் பிடித்து காட்சிப்படுத்த அனுமதிப்பதில்லை. வாராவாரம் கோயிலுக்குச்
செல்பவள். என்னுடைய பெற்றோர் என் தொழிலை அறிந்து, ஆரம்பத்தில் அதிர்ந்து பிற்பாடு
அனுமதித்தார்கள். ஒருவேளை அவர்கள் ஆட்சேபித்திருந்தால் தன் மகளை
இழந்திருப்பார்கள். இந்தத் தொழிலில்தான் ஈடுபட வேண்டும் என்கிற ‘ஐடியா’ எதுவும்
எனக்கு இருக்கவில்லை. அது இயல்பாக நேர்ந்தது” என்கிறார் சன்னி லியோன்.
மே 13, 1981ல் கனடாவின் ஒன்டாரியாவில் பிறந்தார் சன்னி. பெற்றோர் சீக்கியர்.
திபெத்தில் பிறந்த அவரது தந்தை டெல்லியில் வளர்ந்தார். அம்மா, ஹிமாச்சல் பிரதேசத்தை
சேர்ந்தவர். சன்னிலியோனின் இயற்பெயர் கரண்ஜித் கவுர். கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில்
படித்தார். தடகளத்தில் ஆர்வம் அதிகம். பையன்களோடு
தெருவில் ஹாக்கி ஆடுவதில் பிரியம். ஸ்கேட்டிங்கிலும் கில்லி. பதினோரு
வயதிருக்கும்போது முதன்முறையாக முத்தமிடப் பட்டார். பதினாறு வயதில் கன்னித்தன்மையை
இழந்தார். பதினெட்டு வயதில் தானொரு பை-செக்ஸுவல் (ஆண்-பெண் இருபாலரோடும்
உடல்ரீதியான உறவு கொள்பவர்) என்பதை அறிந்துகொண்டார்.
நர்ஸ் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது சக வகுப்புத்தோழி (அவர் ஒரு அஜால்
குஜால் டேன்ஸர்) ஒருவரால் ஒரு ‘ஏஜெண்ட்’, சன்னி லியோனுக்கு அறிமுகமானார். அவர்
மூலமாக பெண்ட் ஹவுஸ் எனப்படும் பத்திரிகையின் தொடர்பு கிடைத்தது. பெண்ட் ஹவுஸ்
பத்திரிகையில் பகீர் போஸ்களோடு லியோன் தோன்ற, கனடாவில் இளமைத்தீ பற்றிக்கொண்டது.
அடுத்தடுத்து பல்வேறு பத்திரிகைகளும் சன்னியை தொடர்பு கொண்டு தங்களுக்கும்
‘தாராளம்’ காட்டவேண்டும் என்று கோரின.
சன்னிக்கு இளைஞர்களிடம் கிடைத்த வரவேற்பு அவரை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. நம்மூரில் குடும்பப் படங்களுக்கு ஏ.வி.எம். எப்படியோ, அதுமாதிரி கனடாவில் ‘அந்த’ மாதிரி படங்களுக்கு அத்தாரிட்டி விவிட் எண்டெர்யிண்மெண்ட். அவர்களுடைய தொழிலே adult entertainmentதான். அந்நிறுவனம் சன்னி லியோனை தங்கள் படங்களில் ‘திறமை காட்ட’ ஒப்பந்தம் செய்தது. ஆரம்பத்தில் பெண்களோடு
மட்டுமே (லெஸ்) நடிப்பேன் என்கிற கொள்கையில் இருந்தார் சன்னி. 2005 கிறிஸ்துமஸில்
சன்னியின் முதல் படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. தொடர்ச்சியான வளர்ச்சியில்
தன் ஆரம்பக்கட்டக் கொள்கைகளைத் தளர்த்தி, ஆண்களோடும் ‘நடிக்க’ சம்மதித்தார் சன்னி.
ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ‘சிலிக்கான்’ பொருத்தி, தன்னை
பிரம்மாண்டப் படுத்திக் கொண்டார்.
காட்டு காட்டுவென காட்ட, அடுத்தடுத்து புகழ் ஏணியின் உச்சியில் சன்னி
ஏறிக்கொண்டே செல்ல, ஐபோன் நிறுவனமும் அவரது திறமையை பயன்படுத்திக் கொண்டது.
சன்னியின் டபுள் எக்ஸ் ரக படங்களையும், வீடியோ காட்சிகளையும் ஐட்யூன்ஸ் ஸ்டோரில்
விற்கத் தொடங்கியது. ஐபோன் முதன்முதலாக ஒரு நீலநட்சத்திரத்தோடு இம்மாதிரி
ஒப்பந்தம் போட்டது சன்னியோடுதான். போனில் பயங்கர சூடு கிளம்பியதால், பிற்பாடு
ஆப்பிள் நிறுவனத்தால் அந்த அப்ளிகேஷன் திரும்பப் பெறப்பட்டது என்பது வேறு கதை.
ஒட்டுமொத்தமாக இதுவரை சன்னிலியோன் முப்பத்தெட்டு படங்களில் நடித்திருக்கிறார்.
முப்பத்தொன்பது படங்களை இயக்கி(?)யிருக்கிறார். சன்லஸ்ட் பிக்சர்ஸ் என்கிற அவரது
பட நிறுவனம் இந்த பிசினஸில் செம காசு அள்ளுகிறது. பொதுவாக இவர் பங்குபெறும்
படங்கள் அதிகபட்சம் ஒருவாரம், இருவாரத்தில் படமாக்கப்பட்டு விடும். இம்மாதிரி
சாமிப்படங்கள் தவிர்த்து, நல்ல படங்கள் சிலவற்றிலும் சன்னி லியோன்
நடித்திருக்கிறார். ஆனாலும் ஹாலிவுட்டில் ஒரு porn starஐ, மற்றபடங்களில்
வளரவிடுவதில்லை. பெரிய திறமை இல்லாவிட்டாலும் இன்றைய தேதியில் உலகளவில் அதிகம்
சம்பாதிக்கும் நடிகையர்களில் ஒருவர்.
முப்பது வயதில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு கணவர், குழந்தை குட்டியென
பிஸியாகிவிடுவேன் என்று ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் லியோன். திடீரென
கடந்தாண்டு டேனியல் வெபர் என்பவரோடு தனக்கு திருமணமாகி விட்டது, அவர்தான் என்
கணவர் என்று அறிவித்தார். ஆரம்பத்தில் டேனியலை லியோனுக்கு பிடிக்கவேயில்லையாம்.
ஆனால் டேனியலோ துரத்தி, துரத்தி காதலித்திருக்கிறார். ஒருமுறை லியோன் தங்கியிருந்த
ஓட்டலுக்கு இருபத்து நான்கு ரோஜா பூக்களை அனுப்பி, தன் காதலை
தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியான அவரது வேண்டுதலைக் கண்டு பரிதாபப்பட்டு டேனியலுக்கு
வாழ்வளித்தார் லியோன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தபோது இயக்குனர் மகேஷ்பட் தன் படத்தில்
நடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இப்போது வெளியாகி வசூலில் சக்கைப்போடு
போட்டுக் கொண்டிருக்கும் jism-2
தான் அந்தப்படம். 'சீன் இல்லை’ என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டாலும், வசூலில் குறைவில்லை. சன்னி
லியோனின் இந்தியத் திரைப்பிரவேசம் கடைசியாக நிகழ்ந்தே விட்டது. உலகம் முழுக்க
இருக்கும் சன்னி லியோனின் ரசிகர்களில் அறுபது சதவிகிதம் பேர் தெற்காசியாவில்தான்
இருக்கிறார்களாம். அடுத்து ஏக்தா கபூரின் திரைப்படம் ஒன்றிலும் ‘புக்’
ஆகியிருக்கிறாராம். ஒன்சைட் தெரிந்தாலும், முழுசாக உரிக்காமல், ஏதோ கவுரவமாக
மனைவியை சேலையில், சுடிதாரில் பாலிவுட்காரர்கள் காட்டுகிறார்கள் என்பதில் கணவருக்கு சந்தோஷம். தன் மனைவி இனி பாலிவுட்டிலேயே
திறமை காட்டவேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
சன்னியின் எதிர்காலம் இனி இந்தியாவில்தான் என்று தெரிந்ததுமே நம்மூர் சிம்பு,
பக்கத்து ஊர் மனோஜ் மஞ்சு மாதிரி ஆண்ட்டி ஹீரோக்கள் குஷியாகிக் கிடக்கிறார்கள். தாம்
நடிக்கும் படங்களில் ஒரு பாட்டிலாவது சன்னியை போட்டுவிட வேண்டும் என்று
வெறிபிடித்துத் திரிவதாக சேதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக