அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இரண்டாவது நாயகியாக சுபிக்ஷாவை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் பாரதிராஜா.
கடந்த
ஆண்டு தேனியில் பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் அன்னக்கொடியும்
கொடிவீரனும். தமிழ் திரையுலகமே தேனி அல்லிநகரத்தின் மலையடிவாரத்துக்கு
திரண்டு வந்து இந்த விழாவில் பங்கேற்றது.அமீர், இனியா, கார்த்திகாவுடன் படப்பிடிப்பு நடந்த நிலையில், பெப்சி - தயாரிப்பாளர் சங்க மோதல் காரணமாக திடீரென இந்தப் படம் நின்றுபோனது.
பின்னர், படத்திலிருந்து அமீரும் இனியாவும் படத்தில் இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குகிறார் பாரதிராஜா.
இனியாவின் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேர்வு செய்துள்ளார். அவர் பெயர் சுபிக்ஷா.
சமீபத்தில் சுபிக்ஷாவுக்கு போட்டோ ஷூட் நடத்தி, புகைப்படங்களை எடுத்தார்கள்.
சுபிக்ஷாவுடன் இப்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பைத் தொடங்குகிறார் பாரதிராஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக