ஒவ்வொரு
அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக (triplex) இருக்குமாம். இந்த 46
மாடிகளிலும் சேர்த்து மொத்தமே 133 வீடுகள் தானாம்.
பெங்களூர்: தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது.46 மாடிகள் கொண்ட இந்தக் கட்டத்தை மந்த்ரி டெவலப்பர்ஸ் நிறுவனம் கட்டி வருகிறது. பண்ணரகட்டா சாலையில் மீனாட்சி மால் கட்டடத்துக்கு அருகே கட்டப்படும் இந்தக் கட்டடம் தான் தென் இந்தியாவிலேயே மிக உயரமான வசிப்பிடமாகும்.
மந்த்ரி பினாக்கிள் என்ற இந்த கட்டடத்தில் ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக (triplex) இருக்குமாம். இந்த 46 மாடிகளிலும் சேர்த்து மொத்தமே 133 வீடுகள் தானாம்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஸ்விம்மிங் பூல், தனித்தனி லிப்டுகள், ஹெலிபேட், கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏர்-கண்டிசனிங், சிஸ்கோ நெட்வோர்க்குடன் கூடிய வசதிகள், நீரை ரீ-சைக்கிள் செய்யும் வசதி என இந்தக் கட்டத்தில் எல்லாமே பிரமிப்புகளாகவே உள்ளன.
உலகின் முன்னணி கட்டடவியல் நிபுணர்கள் இணைந்து இந்தக் கட்டடத்தை உருவாக்கி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக