ஈமு கோழி வளர்ப்பு விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகர்கள், சத்தியராஜ், சரத்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுசி
ஈமு நிறுவனம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக நடிகர்களை வைத்து விளம்பரம்
செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் விளம்பரப்படத்தில் மாடல்களாக பிரபல
நடிகர்கள் சத்தியராஜ், சத்தியராஜ் நடித்துள்ளனர்.நடிகர்கள் சொன்னால் நம்பி ஏமாறும் மக்கள் அவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரத்தினைக் கண்டு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் சுசீ ஈமு நிறுவனம் சொன்னதைப் போல ஊக்கத்தொகையும், போனஸ் பணமும் வழங்கவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனிடையே ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது செக்சன் 420ன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது செக்சன் 120 (பி)யின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சரத்குமார் நடிகர் மட்டுமல்ல சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும், தென்காசி தொகுதியின் எம்.எல்.ஏவும் ஆவார். விளம்பரப் படத்தில் நடித்த நடிகர்கள் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் கீழ் முதன் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
எல்லாம் காசுக்காக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக