அகமதாபாத் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய
கேசுபாய் படேலும், முன்னாள் மத்திய அமைச்சர் கன்ஷிராம் ராணாவும் 'குஜராத்
பரிவர்த்தன் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று துவங்கினர்.
அடுத்த வருடம் நடக்க உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தனது கட்சி
போட்டியிடும் என கேசுபாய் படேல் தெ ரிவித்துள்ளார்.
தனது புதிய கட்சி பற்றி பேசிய படேல், ‘நான் மிகுந்த வேதனையுடன் பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேறுகிறேன். தற்போது பாரதீய ஜனதாவுக்கும், ஜனநாயகத்திற்கும் இடையே வெகுதூரம் காணப்படுகிறது. மேலும், பாரதீய ஜனதாவுக்கு தற்போது மக்கள் மீது அக்கறை இல்லை.
இந்த சூழ்நிலையில் நான் அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால்தான் நான் புதிய கட்சியைத் துவங்கியுள்ளேன். எனது கட்சிதான் உண்மையான பாரதீய ஜனதாவாக இருக்கும். நான் பதவிக்காக கட்சி துவங்கவில்லை. குஜராத் மக்களுக்கு ஒரு மாற்று ஆட்சியை வழங்குவதே எனது நோக்கம்’ எனக் கூறினார்.
மேலும், குஜராத் மாநிலத்தின் 182 சட்டமன்ற தொகுதிகளிலும் தனது தலைமையிலான குஜராத் பரிவர்த்தன் கட்சி போட்டியிடும் எனவும் கேசுபாய் படேல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக