யாழ்.மாநகர சபையில் மூன்றாவது மாதாந்த பொதுக்கூட்டம் இன்று செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்.மாநகர முதல்வர் திருமதி.பற்குணராஜா யோகேஸ்வரி தலமையில் ஆரம்பமானது. கூட்ட ஆரம்பத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர் அ.ம.மங்களநேசன் கடந்த ஓராண்டு காலத்தில் முதல்வர் ஆற்றிய சேவைகளை பாராட்டும் முகமாக முதல்வர் மீதான நம்பிக்கைப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். இதனை அடுத்து மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் பெரும் கூத்தல் குழப்பமாக காணப்பட்டது. அத்தோடு ஆளும் தரப்பினருக்கும் எதிர் தரப்பினரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். ஆளும் தரப்பினர் மேசைகளில் ஏறி நின்று எதிர் தரப்பினரை வெளியேறுமாறும் முதல்வரிடம் கேட்டனர். தொடர்ந்து சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களைப் பிடித்து வெளியேற்றிவிட்டு சபையை நடத்துவேன் என மாநகர முதல்வர் கடும் தொணியில் கூறினார். இதனை அடுத்து எதிர்தரப்பினர் மாநகர முதல்வரை மாற்றுவதற்கு தமக்கு அதிகாரம் இருக்கிறது எனவும் இந்த மாநகர முதல்வர் மாணவர்களுக்கு கற்பிப்பது போன்று தங்களை வழிநடத்துவதாகவும் எதிர்கட்சித் தலைவர் சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் முதல்ரை தெரிவித்தார். ஓராண்டு காலத்தில் எவ்வளவு மக்களுடைய பணங்களை ஏப்பம் விட்டுள்ளீர்கள் என்று எம்மால் கணக்கு காட்ட முடியும் என்று எதிரணியினர் கடிந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் தொடர்பாக மாநகர முதல்வரால் விடுக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆரம்பித்த விவாதம் நடத்துவதற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்களான அ. பரஞ்சோதி, கா. ந. கனகரத்தினம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது 8 - 7 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஆளும் தரப்பு வெற்றிபெற்றது. இதனைத் தொடர்து சபை நடவடிக்கையை முதல்வர் முன்னெடுத்துச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக