ஜப்பானில் கடந்த மாதம் 11-ந் தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. இதில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இப்பேரழிவில் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலைய அணு உலைகள் வெடித்து சிதறின. அதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சு பால், குடிநீர், உணவு பொருட்களில் பரவியுள்ளது. இந்த நிலையில் தற்போது அணு கதிர்வீச்சு கடலிலும் கலந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. டோக்கியோ அணுமின் கார்ப்பரேசன் அதிகாரிகள் புகுஷிமாவில் வெடித்து சிதறிய அணு உலைகளில் ஆய்வு மேற் கொண்டனர்.அப்போது, வெடித்த 2-வது அணு உலையின் அடியில் கீறல் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து கசிந்த கதிர்வீச்சு கடலில் கலந்துள்ளது. இதனால் புகுஷிமா அணு உலையை ஒட்டியுள்ள கடல் தண்ணீரில் வழக்கத்தை விட 1000 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக