அனந்தப்பூர், ஏப்.5: நுரையீரல் மற்றும் நெஞ்சுக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்ய சாய்பாபாவுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் தெரிவித்தனர். சாய்பாபாவுக்கு நேற்று இருந்த அதே நிலைமையே நீடிக்கிறது என உயர்கல்வி மருத்துவத்துக்கான சத்யசாய் நிறுவனத்தின் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது சுயநினைவு குறிப்பிடத்தக்க அளவு முன்னேறி வருகிறது. உயிர்நாடி அமைப்புகள் சீரான நிலையில் உள்ளன. இருப்பினும் செயற்கை சுவாசக் கருவி மூலம் அவருக்கு சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சாய்பாபாவை தரிசிக்க தங்களை அனுமதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகளை பாபா ஆதரவாளர்கள் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புட்டபர்த்தி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நிலைமையை கருத்தில்கொண்டு கூடுதல் போலீஸ் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக