சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான சட்டமொன்றை உருவாக்க இந்தோனேசியா தயாராகி வருகிறது. இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோயோனோ தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டத்தின் அடிப்படையில் ஆட்கடத்தல் தொடர்பில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு 15 வருட சிறை தண்டனையும், அதற்கு தூண்டுதலாக இருந்து லஞ்சம் பெறுபவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும் கடத்தப்படுபவர்களுக்கு 170 000 டொலர் தண்டமும் தண்டனையாக விதிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமானது இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு நன்மையாக அமையுமென தெரிவிக்கப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அதிக சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக