ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

;கடத்தல்காரர்களின் அடிச்சுவட்டில்: “ஏராளமான அகதிகள் இங்கே உள்ளார்கள்” (பகுதி 2);


ஸ்ரூவாட் பெல்<"தாய்லாந்தில் கைது செய்யப் பட்டவர்களில் ரொரான்ரோ பலசரக்கு கடை உரிமையாளர் ஒருவரும் இயந்திர உபகரணங்கள், எண்ணெய் மற்றும் உணவு என்பனவற்றுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு கனடியப் பிரஜையும் அடங்குவர். அந்தப் பொருட்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவை குறிவைத்து வரவிருக்கும் மற்றொரு குடிவரவுக்காரர்கள் கப்பலில் சேகரித்து வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் குற்றம் சாட்டுகிறார்கள்.மனிதக் கடத்தல் கப்பல்களுக்கு எதிரான போராட்டங்களின் விளைவாக போரினால் தாக்கமடைந்துள்ள தங்கள் தாய்நாட்டை விட்டு ஓடிவந்துள்ள நூற்றுக் கணக்கான ஸ்ரீலங்கா குடியேற்றக்காரர்களின் கைதுகள் இடம்பெற்றுள்ளன,அவர்களில் பெரும்பாலானவர்கள் அளவுக்கு மேலாகக் கைதிகளால் நிரம்பி வழியும் பாங்கொக் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். கடத்தல்காரர்கள் பாரிய அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். கனடிய காவல் படை மற்றும் அவுஸ்திரேலிய மத்திய காவல் பிரிவு என்பனவற்றுடன் கூட்டுடன் தாய் காவற்றுறையினர் கடந்த வருடம் மேற்கொண்ட திரளான கைது நடவடிக்கைகளால்,அநேக மனிதக் கடத்தல் வளையத் தலைவர்கள்,பாங்கொக்கை விட்டு அயல்நாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளார்கள்.ஆனால் பெருந்தொகையான பணத்தைச் சம்பாதிப்பதற்காக அவர்கள் இன்னமும் குடியேற்றக்காரர்களின் கப்பல்களை கனடாவுக்கு அனுப்புவதற்கு முயன்று வருகிறார்கள். கனடியக் காவல்துறையினரால் தாய் காவற்பகுதியினருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், “பிரபா,ராகுலன்,கஜன் மற்றும் சிலர் சேர்ந்த ஒரு குழுவினால் சட்டவிரோத குடியேற்றக்காரர் கப்பலொன்றுக்காக பிரயாணிகளைச் சேர்த்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.”பிரபா இப்போது லாவோசில் இருப்பதாக நம்பப்படுகிறது.நாங்கள் நம்புவது, பிரபா, சத்தியசீலன் பாலசிங்கமாக 1969 நவம்பர் 19ல் பிறந்ததாக”. தாய் காவல்துறையினரின் கோப்புகளில் இருக்கும் பிரபாவின் புகைப்படம் தெரிவிப்பது அவர் பாங்கொக் விமானநிலையத்துக்கு 2009ல் வந்ததாக,பருமனான கறுத்த உருவமுள்ள ஆட்டுத்தாடி வைத்து குண்டர்களைப்போல் மிருதுவான பின்பக்கத் தலைமுடி வைத்துள்ள ஸ்ரீலங்காவாசி. அவரது கடவுச்சீட்டின் பிரதியொன்றைப் பார்வையிட்ட ‘போஸ்ட்’டினால் அறிய முடிந்தது,ஸ்ரீலங்காவின் வடபகுதில் தமிழ் சிறுபான்மையோர் செறிந்துள்ள யாழ்ப்பாணம்தான் அவரது பிறப்பிடம் என்று. பாங்கொக்கின் சுற்றாடலிலுள்ள சிலோம் வீதியில்,வேறு நாடுகளுக்கு மாறிச் செல்வதற்காகக் காத்திருக்கும் அநேகமான ஸ்ரீலங்கர்கள் தங்குவதுண்டு,உள்ளுர் வாசிகள் பிரபாவை வாற் காயெக் இந்து ஆலயத்தில் கண்டதாக நினைவுபடுத்திச் சொன்னார்கள்.பாங்கொக்கிற்கு வருவதற்கு முன்பு அவர் பிரான்சில் வசித்ததாகவும் அவருக்கு ஒரு தாய்லாந்து மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பதாகவும் சொன்னார்கள்.மற்றுமொரு தமிழ் பகுதியினர் தெரிவித்தது,முன்பொரு தடவை தென்னிந்திய நகரமான சென்னையிலிருந்து அவர் தோல் ஆடைகள் ஏற்றுமதியினை நடத்தியதாகவும் அங்கு அவர் சிறுதொகையான குடியேற்றக் காரர்களை வான்வழியாக ஐரோப்பாவுக்கு கடத்தியதாகச் சந்தேகிக்கப் பட்டதாகவும். தாய் காவல்துறையினர் தெரிவித்தது,பிரபாவுக்கு பாங்கொக்கில் நிரந்தர முகவரி கிடையாது,பதிலாக இடத்துக்கிடம் நகர்வதற்கு வசதியாக “ஓநாய்கள்” என அவர்கள் குறிப்பிட்ட – மேற்கிற்குக் கடத்தப் படுவதற்காக ஆர்வத்துடன் தாரளமாக பணம் செலுத்தத் தயாராகவிருக்கும் குடியேற்றக் காரர்களை வேட்டையாடித் திரியும் தளர்வான வலையமைப்பு முகவர்களுடன் தங்கியிருப்பார். அவர் பாங்கொக்கில்தான் வழக்கமாகத் தங்குவார்” என்று தெரிவித்த தாய் காவல்துறையின் குடிவரவு அலுவலகத்தின் பிரதி ஆணையாளர் மேஜர் ஜெனரல் பன்சாக் கேசம்சான்ட் “சண் சீ விடயத்துக்குப் பிறகு தனது பங்கான பெருந்தொகைப் பணத்தினைப் பெற்றுக்கொண்டதன் பின் அவர் தாய்லாந்தை விட்டுப் போய்விட்டார்” என்றும் கூறினார். காவல்துறையினரின் நம்பிக்கையின்படி அவர் தனது பயணத்தை வடக்குப் பக்கமாக மேற்கொண்டு நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு விரிந்து கிடக்கும் தாய் - லாவோஸ் எல்லையினைச் சட்டவிரோதமாகக் கடந்து சென்றிருக்கலாம் என்று. கனடிய காவற்பகுதியினர் நம்புவது பாங்கொக்கிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரமாகிய லூஆங் பிரபாங்கில் அவர் தற்போது இருப்பதாக. முன்னர் பிரான்சிய இந்தோசீனாவின் பகுதியாக இருந்த லாவோஸ் வியட்நாம் போரின்போது இடைவிடாத குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.உலகத்திலேயே தலைக்கு இவ்வளவு என்கிற கணக்கில் மிகப் பாரிய குண்டு மழைக்கு இலக்காகிய நாடு என்று லாவோசை விபரிப்பதுண்டு.வட வியட்நாம் துருப்புக்களின் உணவு வழங்கல் வழியாகிய இதனுள் அவர்கள் மறைந்திருப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்க யுத்த விமானங்கள் இந்த நாட்டை குண்டுகளால் நிறைத்தன.இப்போது லாவோஸ் கனடாவில் கண்வைத்துள்ள பெயர்பெற்ற ஸ்ரீலங்கா குடியேற்றக் கடத்தல்காரனின் மறைவிடமாக மாறியுள்ளதாகத் தெரிகிறது. நீரியல் தொழிலாளர்கள்; கூறுவது, பிரபாவுக்கு ஒரு மீன் பண்ணை மற்றும் நெல் வயல்கள் மெக்கோங் நதி, நாம்கான் நதியுடன் இணையும் வட மத்திய பகுதியில் இருப்பதாக.இது அவரின் புதிய மறைவுத் தாவளம், காவல்துறையினர் நம்புவது மற்றுமொரு கடத்தல் நடவடிக்கை இடம் பெறுவதற்கு முன்பாக அவரை வெளியில் காணமுடியாது என்று. அவர் தாய்லாந்தை விட்டு ஓடி விட்டார்,அவர் தாய்லாந்தில் இல்லாத வரைககும் எங்களால் எதுவும் செய்ய முடியாது” இவ்வாறு சொன்னார்,லெப்.ஜெனரல். பொங்பாற்.”மேலும் தாய்லாந்தில் அவர் இல்லாவிட்டாலும்கூட,அவரது வலையமைப்புகள் இன்னமும் தாய்லாந்தில்தான் உள்ளன,அவர்கள் ஒரு புதிய நடவடிக்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்,கனடிய காவல்துறை அதை எதிர்பார்த்து அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.” பிரபாவின் மனிதக் கடத்தல் வளையத்தின் அங்கத்தவர்களாகச் சந்தேகிக்கப் படுபவர்கள் நான்கு நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகிறார்கள்.எல்லோரும் பிறப்பால் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள். கஜன் என்பவரது இயற்பெயர் கஜன் சின்னையா,29 வயதான இவர்;,ஆசியாவுக்குள் பயணம் செய்வதற்கு போலியான ஒரு கனடாக் கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதாக கனடிய காவல்துறைக் கடிதம் தெரிவிக்கிறது. தேடப்பட்டு வரும் மற்றொரு ஸ்ரீலங்கா மனிதக் கடத்தல்காரரின் பெயர்,பதிஸ்குமார் செந்தில்நாதன்.”இவரும் இந்த வலையமைப்பின் ஒரு பகுதி,ஆனால் சண் சீ நடவடிக்கைக்குப் பிறகு இவர் நாட்டை விட்டுத் தப்பி விட்டார்” என்று தெரிவித்தார்,தாய் காவற்றுறையின் குடிவரவு அலுவலக புலனாய்வுப் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் மனூ மெக்மொக். காவல்துறையினர் நம்புவது ஆட்சேர்ப்பவர்கள்,பிரயாணிகளிடமிருந்து தாங்கள் சேகரித்த பணத்தை நாட்டுக்கு வெளியே உள்ள அமைப்பாளர்களுக்கு அனுப்புவதற்கு வெஸ்டேன் யூனியனின் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்று.புதிய கப்பலுக்காக சேரும் பயணிகளிடையே உள்ள ஒரு மனிதன் சண் சீ கப்பலுக்காக இன்னும் வரவேண்டிய பாக்கிப் பணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.மற்றொரு ஆள்சேர்ப்பாளராகச் சந்தேகிக்கப் படுபவர் பாங்கொக்கின் போங் டவர் அடுக்கு மாடித் தொடரிலிருந்து இயங்கிவரும் துஷி ஆவார்.இது பாங்கொக்கில் சொய் என அழைக்கப்படும் குறுகிய ஒழுங்கை ஒன்றில் அமைந்துள்ளது,மாடி வீடுகளின் முன்மாடங்களில் துணிகள் காயவிடப் பட்டிருந்தன. ஒரு பெண்மணி தடுப்புக் கம்பிகளின் மேலாக வளைந்து கைகளை அசைத்து வரவேற்கிறார். வெளியே தாய்லாந்தின் பதப்படுத்திய இறைச்சித் துண்டுகளைக் கொண்டு சமைக்கப்படும் விசேட உணவான ‘சாட்டே’க்கு வேண்டி நீளமான இரும்புக் கம்பிகளில் இறைச்சித் துண்டுகள் பதப்படுத்தப் பட்டுக் கொண்டிருந்தன முன்முகப்பில் அமர்ந்திருந்த வரவேற்வுப் பெண், குழந்தையுடன் வந்த ஒரு ஸ்ரீலங்கனை நினைவு கூருகிறார்,ஆனால் அவரால் வேறு எதுவும் கூற முடியவில்லை கனடிய அதிகாரிகள் விசுவசிப்பது ஒவ்வொரு வருடமும்  உருக்கினாலான பல பெரிய குடியேற்றக்காரப் படகுகளை கடத்தல்காரர்களுக்கு கனடாவுக்கு அனுப்பக்கூடிய தகுதி இருக்கின்றது என்பதை. பாவிக்கப்பட்ட கப்பல்களை அந்தப் பிரதேசத்தில் வெகு சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும்,மற்றும் தாய்லாந்து,மலேசியா,இந்தியா,ஸ்ரீலங்கா போன்ற இடங்களிலிருந்து எதிர்கால அகதிகளுக்கான வழங்கல்கள் வெகு தாராளமாகவே கிட்டும்.
“திட்டவட்டமான நடவடிக்கைகள் எதனையும் அறியாமலே ஏராளமான தமிழர்கள் பாங்கொக்கில் உள்ளார்கள். ஏராளமான தமிழர்கள் மலேசியாவிலும் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் இங்கே அகதி அந்தஸ்தினைத் தேடுகிறார்கள்.”என்று பாங்கொக்கை தளமாகக் கொண்டியங்கும் கனடிய காவல்துறையின் மனிதக் கடத்தலுக்கு எதிரான குழுவின் தலைவரான, பரிசோதகர் பெம்பேட்டன் குறிப்பிட்டார்.”நான் நினைக்கிறேன் சிறப்பான வாழ்வை அடைவதற்காகக் கிடைக்கும் விரைவான ஒரு அரிய சந்தர்ப்பத்தில் அவர்களில் சிலர் அதில் தாவாமல் இருக்கமாட்டார்கள் என நினைப்பதுதான் குழந்தைத் தனமானது”என்று.
கடத்தல்காரர்களின் தொலைபேசிப் பரிவர்த்தனைகளைக் கொண்டு ஓரளவுக்கு ஆய்வு நடத்தி கடத்தல் வலையமைப்பின் அங்கத்தவர்களின் சிக்கலான உத்தியோக ஒழுங்கமைப்பு அட்டவணையை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் காவல்துறை மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கை செய்வது, கடத்தல்காரர்களுக்கு சம்பிரதாயமான ஒரு உத்தியோகக் கட்டமைப்பு இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை என்று.
பாங்கொக்கில் மனிதக்கடத்தலுக்கு எதிரான ஒரு பணிமனையைக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின்  போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் கூற்றுப்படி, இந்த வலையமைப்பு எப்போதும் ஒரு தலைவரையோ அல்லது ஒரு திட்டப் பிரதானியையோ கொண்டிருப்பதில்லை,அதற்குப் பதிலாக அவர்களிடம் சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணைப்பாளர்கள் அல்லது அமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த இணைப்பாளர்கள், பிரயாணிகளைச் சேர்ப்பதற்கு,கப்பல் கொள்வனவு செய்வதற்கு, கப்பலில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கு,மற்றும் குடியேற்றககாரர்களைத் தங்க வைப்பது போன்ற வேலைகளுக்காக மற்றவர்களை உதவி ஒப்பந்தகாரர்களாக நியமித்துக் கொள்கிறார்கள்.இந்த வலையமைப்புகள் பெரும்பாலும் தனிப்பட்ட தொடர்புகளையே அடித்தளமாகக் கொண்டவை,அவைகளை மாறாமல் தொடர்பு கொண்டு ஒரு நடவடிக்கையிலிருந்து மற்றதுக்கு மாறிக் கொள்கிறார்கள்.”அநேகமாக ஆட்சேர்ப்பவர் குறிப்பிட்ட ஒரு கடத்தல்காரரில் மட்டும் தங்கியிருப்பதில்லை” என்று கூறுகிறது ஐநா குற்றப்பிரிவின் சமீபத்தைய ஆவணம் ஒன்று.”அநேகமாக அவர்கள் சொந்த நாடடிலேயே நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள் அல்லது குடியேற்றக்காரரின் தாய்மொழியில் நல்ல பரிச்சயம் உள்ளவர்களாவோ,மேலும் அவர்களை நன்கு அறிந்தவர்களாகவோ இருப்பார்கள்.”
கனடிய எல்லைச் சேவைகள் முகவர் நிலைய அறிக்கை ஒன்றில் சொல்லியிருப்பது, அவ்வாறான 45 முகவர்கள் சண் சீ குடியேற்றக்காரர்களுடன் மேற்கொண்ட நேர்காணல்கள் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று.தாய் காவல்துறையினர் அவ்வாறான 20 முகவர்களின் பெயர்கள் தங்கள் வசமிருப்பதாகச் சொன்னார்கள்.”எங்களிடம் அந்தப் பட்டியல் உள்ளது நாங்கள் அவர்களைப் பிடிப்பதற்கான புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்” மேஜர்.ஜெனரல்.மனூ தெரிவித்தார்.
ஐநா குற்றப்பிரிவு அலுவலக ஆவணம் தெரிவிப்பது இந்த வலையமைப்பு அமைப்பாளர்கள் வெகு அபூர்வமாகத்தான் நீதியின் முன் கொண்டுவரப் படுகிறார்கள் என்று.”இந்த வகையானவற்றை குற்றவியல் நீதிமுறையின் முன்பாக கொண்டு சென்று தண்டிக்க வேண்டியது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒரு தேசிய நடைமுறை” என்றார் மத்திய காவல் கண்காணிப்பு பிரிவின் தலைவரான பிரதி ஆணையாளர் பொப் போல்சன்.
கனடிய காவல்துறை கடந்த வருடம் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகாரிகளை உள்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து குறிப்பாக தாய் காவல்துறையினருடன், பணியாற்றுவதற்காக தென்கிழக்காசியாவுக்கு அனுப்பியுள்ளது.அதற்குப் பெயரிடப் பட்டிருப்பது ஹைட்ரா திட்டம் என்று - ஒரு பெயர் அது பிரதிபலிப்பது கடத்தல் வலையமைப்பை தாய்லாந்துக் கருத்தான பல தலைகள் கொண்ட பாம்பு என்பதாக.
“எங்களின் இலக்கு இந்த வலையமைப்பு இயக்கத்துடன் நெருக்கமான பிணைப்பினை கொண்டுள்ள உயர் பிணைப்பாளர்கள்” என்றார் தாய் காவல்துறையின் குடிவரவுப் பகுதியின்  மேஜர். ஜெனரல். பன்சாக். “ஆகவே ஒருமுறை அந்த உயர் பிணைப்பாளரின் தலையை வெட்டிவிட்டால் உண்மையாக முழு உடலுமே இயங்க முடியாமல் போகும்.”
தாய் காவல்துறையினரின் நம்பிக்கைப்படி அப்படியான ஒரு தலையை கடந்த ஜனவரி 12ல் தாங்கள் பிடித்து விட்டதாக. மற்றொரு அரசாங்க முகவர் நிலையம் அளித்த தகவலின்படி செயற்பட்ட அதிகாரிகள் பாங்கொக்கின் லற் பிளா காஓ சந்தைப் பகுதியில் எட்டு ஆட்களைத் தேடி அன்று காலை  திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
தனது கடையில் இருந்து கோழி இறைச்சியை வெட்டிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண், அந்த முலையில் இருக்கும் வெளிர் ஊதா நிறக் குடியிருப்பில் வசிக்கும் வெளிநாட்டவர்களைப் பற்றி தன்னிடம்தான் அதிகாரிகள் விசாரித்ததாகச் சொன்னார்.ஆனால் அந்தக் குடியிருப்பில் வாடகைக்கு இருப்பவர்களைப் பற்றிய விபரங்கள் அவருக்குச் சரியாகத் தெரியவில்லை,எனவே காவல்துறையினர் அவரை விட்டுவிட்டு அந்த நான்கு தளங்களுள்ள அடுக்குமாடியின் படிக்கட்டுகளினூடாக 4ஃ2  குடியிருப்பை நோக்கி ஏறத் தொடங்கினார்கள். சிறிய அறை, கூரையில் ஒற்றை புளோறசன்ட் குழல் விளக்கு மட்டும்,வெள்ளை நிற மாபிள் ஓடுகள் பதிக்கப்பட்ட தரை,மற்றும் வீதியின் போக்கு வரத்துக்களையும்,வீதியின் மறுபக்கமுள்ள விமானசேவை அலுவலகத்தையும் பார்த்தபடியான ஒரு முன்மாடம்,இதுதான் அந்தக் குடியிருப்பு. காவல்துறையினர் அங்கிருந்த கடத்தல் வலையமைப்பின் அங்கத்தவர் எனக் கருதப்படும் ஸ்ரீலங்காவாசியான  சந்தானோ பெர்னாண்டஸ் என்பவரை கைது செய்தார்கள்.
அந்த அறையை அவருக்கு மாத வாடகையான 2.500 பாற்றுக்களுக்கு (சுமார் 80 டொலர்களுக்கு) வாடகைக்கு கொடுத்திருந்த வீட்டுடமை “அவர் மிகவும் பணிவுள்ளவராகத் தோற்றமளித்தார்” எனக் கூறினார்.வீட்டு உரிமையாளரிடம் இருந்த அவரது கடவுச் சீட்டின் போட்டோ பிரதி அவர் லாவோசுக்குப் பலதடவைகள் சென்று திரும்பியதைக் காண்பித்தது.
அந்த அறைக்கு அருகிலிருந்த  குடியிருப்புகளிலிருந்து காவல் துறையினர் மேலும் ஐந்து ஸ்ரீலங்கா வாசிகளைக் கைப்பற்றினர்.அவர்களுடன் ஒரு இந்தியரையும் 47 வயதான ஜெயசந்திரன் நடேசன் என்கிற ஜெர்மனியரையும் கைது செய்தனர்.நடேசனைப் பற்றி
மேஜர். ஜெனரல்.மனூ, இவர்தான் பிரபாவின் வலது கரமாகச் செயற்பட்டு வருபவரும் தாய்லாந்தில் எஞ்சியிருந்த உயர் மனிதக் கடத்தல் முகவரும் ஆவார், என்று வருணித்தார்.
அவரை விசாரணை செய்ய கனடியப் பொலிசாருக்கு பின்னர் அனுமதி வழங்கப் பட்டது.
அவரது கைது நடந்த ஏழு வாரங்களின் பின்னர்,பாங்கொக்கின் சுவான் புலு வீதியிலுள்ள குடிவரவுக்காரர்களின் தடுப்புக் காவல் நிலையத்தில், திரு.நடேசன் கைதிகளின் உடையான கடும் ஒறேஞ் நிற சட்டையும் வெளிர் நீல நிற அரைக்கால்சட்டையும் வெள்ளை நிறப் பாதணியும் அணிந்தபடி அவரது கைதி அறைக் கம்பிகளின் பின்னே காட்சி தந்தார்.
கச்சிதமான உருவ அமைப்பு மற்றும் உடம்பில் பச்சை குத்தியிருந்தவருமான ஸ்ரீலங்காவில் பிறந்த தடுப்புக் காவல் கைதி நஷனல் போஸ்ட் நிருபருடன் பேசுவதற்கு மறுத்து விட்டார்,ஆனால் பத்திரிகைக்காக பணியாற்றும் தாய் மொழி பெயர்ப்பாளருடன் சுருக்கமாகப் பேசினார்.அதில் அவர் தான் எதுவிதத் தவறையும் செய்யவில்லை என்றும் கனடாவுக்கு மனிதர்களைக் கடத்துவதில் தான் சம்பந்தப் பட்டிருக்கவில்லை என வலியுறுத்தினார்.
தாய் பொலிசாரின் அறிக்கையின்படி திரு.நடேசன் வேறு விதமான கதையொன்றைச் சொல்கிறார்.அது சொல்வது “சட்ட விரோதமாக ஸ்ரீலங்காத் தமிழ் இனத்தவர்களை மூன்றாம் நாடுகளுக்கு தாய்லாந்தை ஒரு இடைமாற்றுத் தளமாகப் பயன்படுத்தி அனுப்பி வைக்கும்” முகவர் குழுவின் தலைவர் இவர்தான் என்று.
அந்தக் குழு “கிட்டத்தட்;ட ஆகஸ்ட் 2010 காலப் பகுதிவரை அப்படிச் செய்வது மூலம் வெற்றி கிடைத்திருக்கிறது.அந்தச் சமயத்தில்தான்;  சுமார் 492 ஸ்ரீலங்காத் தமிழ் இனத்தவர்கள் சட்ட விரோதமாக சண் சீ கப்பல் மூலம் கனடாவுக்குள் வந்தனர். தற்போது திரு.நடேசன் தாய்லாந்தில் அப்படியான முகவர்களில் மிகப் பெருந்தலையாகக் கருதப்படுகிறார்.”அவரைக் கைது செய்யும் சமயத்தில் அவர் “ பெப்ரவரி 2011 ல் சுமார் 200 ஸ்ரீலங்கா வாசிகளை சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் மற்றுமொரு முயற்சியில் ஈடுபட்டிருந்தார்” என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
தாய் காவல்துறையின் ஒரு இரண்டாவது அறிக்கை கூறுவது,பிரயாணிகளை தென்பகுதி துறைமுக நகரமான சோங்காலாவுக்கு கொண்டு சென்று மலேசியாவின் குவாலாலம்பூருக்கு அனுப்புவது.அங்கிருந்து அவர்கள் கடந்து சென்று இந்தோனசியாவின் ஒரு பாலத்தை  அடைவது அங்கு வைத்து அவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணமாவது என்பதுதான் அவரது திட்டம்.அது மேலும் தெரிவிப்பது திரு,நடேசன் இந்த வலையமைப்பை பிரபாவுக்காக நடத்துகிறார்,மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள மேலும் 80 வரையான ஸ்ரீலங்கா வாசிகள் பாங்கொக்கின் அயல் பகுதிகளான,பாங்லும்பூ,றமின்ட்ரா,மற்றும் டொண்முவாங் பகுதிகளில் கனடாவுக்குச் செல்வதற்காகத் தங்கியிருக்கிறார்கள் என்று.
ஆனால் இவை எல்லாமே தவறானவை என நடேசன் தெரிவித்தார்.தான் 25 வருடங்களாக ஜேர்மனியில் வாழ்ந்து வந்ததாகவும்,தனது தாய் பெண் சிநேகிதியுடன் சேர்ந்திருப்பதற்காகவே பாங்கொக்குக்கு நகர்ந்ததாகவும் அவர் கூறினார்.தான் ஒரு கெட்ட மனிதன் என்று மக்கள் ஏன் நினைக்கிறார்கள் என்பதை தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் மேலும் சொன்னார்.
யாரோ தன்னைப் பற்றிக் காவல்துறையினரிடம் முறையிட்டிருப்பதாகவும் அநேகமாக அது தன்மீது பொறாமை கொண்ட மற்றொரு ஸ்ரீலங்கனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
“எங்களுக்கு உண்மையில் அவரைக் கைது செய்ய வேண்டும்.அவர் திரும்பவும் இதே குற்றத்தைச் செய்வார்,ஸ்ரீலங்காவிலிருந்து திரும்பவும் ஆட்களைக் கடத்த முயற்சி செய்வார்”
என அவர் கூறினார்.

“அவர் நிறுத்தப் போவதில்லை.”
(நன்றி : த நஷனல் போஸ்ட்)

கருத்துகள் இல்லை: