பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா: கலைஞர்
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் நேரத்தில் மட்டும் இலங்கை தமிழர்களுக்காக அதிமுக போன்ற கட்சிகள் அக்கறை காட்டி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் என்ன. அந்த தீர்மானத்தை திமுக ஆதரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை. நடுநிலை வகித்தோம்.
அந்த தீர்மானம் இலங்கையில் இருந்து பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவந்து சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டது யார்.
திமுக அரசா. நெஞ்சிலே கை வைத்து சொல்லுங்கள். நெஞ்சிருந்தால் கை வைத்து சொல்லுங்கள். நாங்களா அந்த தீர்மானம் போட்டோம். இல்லையே.
இலங்கையிலே ராஜபக்சவின் ஆணவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான் கண்ணீர் விட்டு அழுது கவிதைகள் எழுதினேன்.
அப்போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார். போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம். இலங்கை தமிழர்களை பார்த்து ஜனங்கள் என்று சொல்லி அவர்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்ன ஜெயலலிதா, இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நெருக்கமான உறவாகி விட்டார்.
இலங்கையில் தமிழர்கள் வாழ வைக்கப்பட வேண்டும் என்று போராடியது திமுக. இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பது திமுகதான் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக