சனி, 9 ஏப்ரல், 2011

ராகுல் காந்தி பிரசாரக் கூட்டத்தில் இலங்கை அகதியை தேடிய பொலிசார்

தூத்துக்குடி, ஏப். 7: இலங்கை அகதிகள் முகாமில் இருந்து தப்பிய நபர், விளாத்திகுளத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற கூட்டத்தில் புகுந்துள்ளாரா என்று அவரது புகைப்படத்துடன் பொலிசார் தீவிர சோதனை நடத்தினர்.  தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி பேசினார்.  இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் கைகளில் ஒரு நபரின் புகைப்படம் அடங்கிய துண்டுச் சீட்டுகள் இருந்தன. அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட நபரை போலீஸப்ர் கூட்டத்தில் தீவிரமாகத் தேடினர்.  இதுதொடர்பாக விசாரித்தபோது புகைப்படத்தில் இருந்த நபர் இலங்கை தமிழ் அகதி செல்வக்குமார் என்பது தெரியவந்தது.  சேலம் மாவட்டம், நாகையன்பட்டியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த செல்வக்குமாரை கடந்த ஓராண்டாக காணவில்லையாம். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.  இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றிருந்த அவர், இப்போது இந்தியாவுக்குத் திரும்பியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாம்.  எனவே அவர், ராகுல்காந்தி பங்கேற்ற பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடியதாக பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: