;சென்னை, ஏப்.7: தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரும் இதுகுறித்து இன்று மாலை 5 மணிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. தேர்தல் பிரசாரத்தின்போது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிவருவதாக திமுக தேர்தல் குழு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணித் தலைவர்களின் தீவிர பிரசாரத்தால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக