ஓஷோ-வாழ்க்கை குறிப்பு
ஓஷோ 1931 டிசம்பர் 11 ல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.
ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21ல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர் கபீர், இரமணர், மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர். சுமார் இருபது ஆண்டுகாலம் ஞானம் அடைந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். சந்தேகப்பட்டு கேட்ட சிலரிடம் மட்டும்தான் சொல்லியிருக்கிறார். 1971 மே மாதம்தான் தான் ஞானம் அடைந்ததை பகிரங்கமாக அறிவிக்கிறார்.
1953-1956 கல்வி :
1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.
சாகர் பல்கலை கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்த பிறகு ஜபல்பூர் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்து எல்லோரையும் விவாதத்துக்கு அழைத்து அறை கூவல் விடுத்தார்.
பிறகு இந்த காலகட்ட மனிதர்களுக்கு ஏற்ற புரட்சிகரமான தியான முறைகளை உருவாக்க ஆரம்பித்தார். 1970 ல் தன்னுடைய ஆற்றல் வாய்ந்த தியானமான Dynamic Meditation யை அறிமுகப்படுத்தினார்.
1960-1970 காலகட்டத்திலே அவர் பேசுவதை கேட்க 50,000 பேர் திரள்வார்கள்.
2010-இந்த காலகட்டத்திலே செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரித்தாலே முகம் சுழிக்கும் இந்திய மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, இதற்கு நாற்பது வருட காலத்துக்கு முன்பே ஒடுக்கப்பட்ட காமத்துக்கு எதிராக அவர் பேசியதால் கோபமடைந்த சிலர் அவரை பற்றி தவறான செய்திகளை பரப்பினர்.
துறவு என்ற பெயரில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு ஓடுபவர்களை கடுமையாக சாடினார். எதையும் துறக்காமல், எங்கேயும் ஓடாமல் அடைய வேண்டியதை இருந்த இடத்திலே அடையலாம் என்ற ஓஷோ அதற்கு தியானம் மட்டும்தான் தேவை என்றார்.
1970 காலகட்டத்தில் அவருடைய புரட்சிகரமான பேச்சை கேட்கவும், புரட்சிகரமான தியான முறைகளை பயிலவும் மேலைநாட்டினர் அலையென குவிந்தனர்.
மும்பைக்கு தென்கிழக்கே நூறு மைல் தொலைவில் உள்ள புனேவில் ஓஷோ கம்யூன் உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவை அலற வைத்த ஓஷோ
1980 க்கு பிறகு அமெரிக்கா சென்ற ஓஷோ அங்கே 126 சதுர மைல் கொண்ட நிலப்பரப்பை வாங்கி ரஜ்னீஸ்புரம் என்ற நகரை உருவாக்கினார். உலகமெங்கும் இருந்து மக்கள் அங்கே குவிந்ததால் அமெரிக்கா அச்சப்பட்டது.
குடியேற்ற சட்டத்தை மீறிவிட்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறிய அமெரிக்க அரசு அவரை கைது செய்தது.
அவரை விடுதலை செய்த போது பதினைந்து நிமிடங்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டுமென்று உத்தரவு விட்டார்கள். அவருடைய கார் வெளியே தயாரக நின்றுகொண்ருந்தது. அவருடைய ஜெட் விமானம் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு தயாராக எஞ்சின் ஓடிக்கொண்டே இருந்தது.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அவர் 1985 நவம்பர் 17 ல் தில்லியில் தரையிறங்கிய போது ஆயிரக்கணக்கான இந்திய சன்னியாசிகளால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
1985-1986 ல் உலக சுற்று பயணத்தை ஆரம்பித்தார்.
1986 டிசம்பர் 30 ல் புனேவுக்கு திரும்பிய ஓஷோ தமது இறுதிக்காலம் வரை அங்கேயே இருந்தார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அவரது உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டது. அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு மெதுவாக கொள்ளும் விஷம் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்தார்கள்.
1990 ஜனவரி 19 ல் தன் உடலை விட்டு பிரிந்து சென்றார். அவருடைய ஒரே செய்தி தியானம் தான். அதைதான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே வந்தார்.
அவருடைய கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்.
ஓஷோ
பிறக்கவுமில்லை
இறக்கவுமில்லை
அவர் இந்த பூமி என்னும் கிரகத்தை பார்வையிட்ட காலம் 1931-1990
please click for more details
http://www.pandiyan74.wordpress.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக