புதுதில்லி, ஏப்.3- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில், தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோர் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் முன்பாக நாளை ஆஜராகவுள்ளனர். காலை 11 மணிக்கு நீரா ராடியாவும், மாலை 3 மணிக்கு டாடாவும் ஆஜராகின்றனர் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொது கணக்கு குழு அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் ஆகியோருடனான நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரிடமும் டாடாவிடமும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக