சனி, 9 ஏப்ரல், 2011

பிரான்ஸ், கனடா, ஜோ்மன், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் ஆர்வம்

அரசியல் தஞ்சம் கோரிய பலர் நாடு திரும்பியுள்ளனர்
வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பியிருப்பதாகவும், பிரான்ஸ், கனடா, ஜோ்மன், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமானவர்கள் அவ்வாறு நாடு திரும்பியிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கான இலங்கைப் பிரதிநிதி மைக்கல் ஸ்வெக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுற்ற நிலையில் இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் கடும் ஆர்வம் காட்டி வருவதாகவும், கடந்த வருடம் மட்டும் 3200 பேரளவில் நாடு திரும்பியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நாடு திரும்பியவர்களுக்கு உதவுவதற்கென வடக்கு மாகாணத்தில் மட்டும் தற்போதைக்கு ஐந்து இணைப்புக் காரியாலயங்களை நிறுவியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: