இராணுவத்திற்கெதிராக போரிட எங்களுக்கு ஆயுதம் கடத்தித் தந்தவர் கே.பி: அவரையும் விசாரியுங்கள்: தடுப்புக்காவல் கைதிகள்
இராணுவத்திற்கெதிராக போரிடுவதற்கு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஆயுதக்கடத்தல் மேற்கொண்ட கே.பி. விசாரிக்கப்பட வேண்டுமென்று தடுப்புக் காவல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்புக் காவல் கைதிகளிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முயன்ற போதே அவர்கள் மேற்கண்ட கோரிக்கையை முன் வைத்துள்ளனர். விடுதலைப் புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இயக்கத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டு, போர்ப்பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தாம் நிரபராதிகள் என்று வாதிடும் அவர்கள், தமக்கு போரிடுதவற்கான ஆயுதங்களை வழங்கிய கே.பி. யை மட்டும் விசாரிக்காமல் விட்டு வைத்திருப்பதன் மர்மம் என்னவென்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். தடுப்புக் காவல் கைதிகளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையும் இடைநடுவில் கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக