திங்கள், 28 ஜூன், 2010

கவுதமி, தூங்காமல் அழுதிருக்கிறேன். நான் இல்லாவிட்டால் என் மகள் சுப்புலட்சுமி

தன்னம்பிக்கைக்கு பெரும் உதாரணம் கவுதமி... உயிரைக் கொல்லும் ஒரு கொடிய நோயுடன் போராடிக் கொண்டே, தனது தனி வாழ்க்கையையும் கலை வாழ்க்கையையும் தொடர்வது சாதாரண காரியமல்லவே.

சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கூறப்பட்டது. அதை இப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ள கவுதமி, இனி தன் வாழ்நாள் முழுக்க புற்று நோயால் அவதிப்படுவோருக்கு உதவும் வகையில் வாழப் போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருப்பது உண்மைதான். ஆரம்பத்தில் நான் இது குறித்து கலங்கியது உண்டு. பல இரவுகள் தூங்காமல் அழுதிருக்கிறேன். நான் இல்லாவிட்டால் என் மகள் சுப்புலட்சுமி அநாதை ஆகிவிடுவாரே என்ற எண்ணம்தான் அந்த அழுகைக்கு காரணம்.

ஆனால் புற்று நோயை எதிர்த்து வாழ முடியும் என்பதற்கும் நான்தான் உதாரணம். இந்த நோயால் அவதிப்படுவோருக்கு நம்பிக்கையளிப்பதுதான் என் முதல் கடமையும் லட்சியமும்" என்கிறார்.

இந்தப் பணியை முழு ஈடுபாட்டுடன் முன்னெடுக்கவே, தனது சின்னத் திரை கமிட்மெண்டுகளைக் கூட குறைத்துக் கொண்டுள்ளாராம்.

கருத்துகள் இல்லை: