சனி, 27 நவம்பர், 2021

நோரோ வைரஸ்: நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி? - மருத்துவர் ராமலிங்கம் பேட்டி


hindutamil.in  : கேரள மாநிலத்தில் 13 கல்லூரி மாணவர்களிடம் நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அளவுக்குத் தீவிரத் தன்மை இல்லாத வைரஸாக நோரோ வைரஸ் அறியப்பட்டாலும், அதன் தொற்றுத் தன்மை காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகவிலும் நோரோ வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசும் நோரோ வைரஸ் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நோரோ வைரஸ் குறித்தும், அவ்வைரஸிடமிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் வேலூர் அரசு மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைமை மருத்துவர் ராமலிங்கத்திடம் பேசினோம்.
நோரோ வைரஸ் என்றால் என்ன? 

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!

கலைஞர் செய்திகள் : சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு விலக்கு சட்ட விவகாரம்- ஆளுனருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 மாலைமலர் : நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து, “நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானதா, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்-அமைச்சர் அமைத்தார்.

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை .. என்ன நடக்கிறது?

இலங்கை அகதிகள்
அகதிகள் முகாம்
இலங்கை அகதிகள்

பிரபுராவ் ஆனந்தன்  -      பிபிசி தமிழுக்காக  :  இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு நடத்தும் அகதிகள் மறுவாழ்வுக்கான நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ்
இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிய பல்வேறு அகதிகள் முகாம்களிலும் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை ஜெசிந்தா இன்று பார்வையிட்டார். பின்னர் இலங்கை அகதிகள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் உ பி, ம பி , பீகார், ஜார்கண்ட் - நிதி ஆயோக் அறிக்கை

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் இவைதான்- நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு

மாலைமலர் : ஏழ்மையான மக்கள் தவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி:  நாட்டில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டில் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51.91 சதவீத மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஜார்க்கண்டில் 42.16 சதவீத மக்களும், உத்தர பிரதேசத்தில் 37.79 சதவீதம் மக்களும் வறுமையில் உள்ளனர்.

கமல்ஹாசனின் உடல்நிலை .. மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை!

Rayar A  -   Oneindia Tamil :   சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய நிலையில் கமலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
இதனை தனது டுவிட்டரில் உறுதிப்படுத்திய கமல்ஹாசன், ''அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று அவர் கூறி இருந்தார்.

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?

இலக்கியா .இன்போ  :  94,000 இரசியப் படையினர் உக்ரேன் எல்லையில் குவிக்கபட்டு போர் பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையை மேற்கோள் காட்டி புளூம்பேர்க் ஊடகம் 2021 நவம்பர் 21-ம் திகதி தகவல் வெளியிட்டது.
உக்ரேன் அரசு பிரிவினைவாதிகள் கையில் உள்ள உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள Donetsk மற்றும் Luhansk பிரதேசங்களில் இரசியப் படைகள் தமது ஆக்கிரமிப்புத் தாக்குதல் தயார் நிலையை விரிவு படுத்தி வருகின்றன என அறிவித்துள்ளது.
உக்ரேனின் இறைமைக்குட்பட்ட அந்த இரண்டு பிரதேசங்களும் 2014இல் தம்மை தனி நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ளன.
   2014இல் உக்ரேனின் கிறிமியாப் பகுதியை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்கப் படைத்துறையினர் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு உக்ரேன் எல்லையை நோக்கி இரசியா படைநகர்வு செய்வதைப் பற்றி அறிவுறுத்தியுள்ளார், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கென் உக்ரேனை ஆக்கிரமிப்பது பற்றி இரசியாவிற்கு தன் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்

உதயநிதி பிறந்தநாள்: காத்திருந்து வாழ்த்திய அமைச்சர்கள்!

உதயநிதி பிறந்தநாள்: காத்திருந்து வாழ்த்திய  அமைச்சர்கள்!

மின்னம்பலம் : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இரவு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் காத்திருந்து உதயநிதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பரிசுகளை வழங்கினர்.
தமிழக முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞர் அணி செயலாளரும், திரைப்பட நடிகருமான உதயநிதியின் 44ஆவது பிறந்த நாள் இன்று(நவம்பர் 27) திமுகவினரால் கொண்டாடப்படுகிறது.
தொடர் மழையால் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை தவிர்த்து, ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்கும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுமாறு உதயநிதி நேற்று முன் தினம் கேட்டுக்கொண்டார்.

தஞ்சாவூர் இளைஞரை நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்குதல்.. 15 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

கண்டுகொள்ளாத போலீஸ்

Rayar A  -   Oneindia Tamil  :: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் திருமணத்துக்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
சதீசும், அவரது சகோதரரும் தொன்றாம் பட்டு பகுதிக்கு ஏஜெண்டு ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர் சதீஷ் காரில் சென்றுள்ளார்.
அவரது சகோதரர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
தொன்றாம் பட்டு கிராமத்தில் வைத்து சதீஷ் தனது காரை ரிவர்ஸ் எடுத்தபோது அவரது சகோதரரின் மோட்டார் சைக்கிளில் இடித்துள்ளது.
அப்போது அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த சிலர் உடனடியாக வந்து யார் நீ?
 உனக்கு எந்த ஊர்? ஏன் பைக்கை இடித்தாய்? என்று தகராறு செய்துள்ளனர்.

கரூர்மாவட்டம் செந்தில் பாலாஜியின் கோட்டையா ? ஜோதிமணி போராட்டம் உணர்த்துவது என்ன?

aramonline.in:  ஜோதிமணி போராட்டம் உணர்த்துவது என்ன?  - சாவித்திரி கண்ணன் :  
எந்த ஒரு எம்.பியானாலும், மக்கள் நலத் திட்டங்களை மாநிலஅரசின் ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும்!
மாநில அரசு என்றால், மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும்!
ஜோதிமணி அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு சமூக செயல்பாட்டாளர்! கரூர் எம்.பி தொகுதியில் சுமார் 10,000 மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உபகரணங்களை கேட்டு காத்துள்ளனர். இந்த நிலையில் மாநில அரசால் மட்டுமே இந்த தேவைகளை நிறைவு செய்துவிட முடியாது! ஆகவே, அவர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையிடம் விலையில்லாமல் பெறுகின்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கேட்டுத் தர திட்டமிடுகிறார்!

வெள்ளி, 26 நவம்பர், 2021

போரை தவிர எஞ்சிய எல்லா வழிகளையும் அடைத்து தற்கொலை அழிவுப்பாதையில்..... அந்த தற்குறி

Sugan Paris :  முழுமூட அறிவிலியும் நிர்மூடனுமான ஒரு தற்குறியின் பிறந்தநாள் இன்று.
தன்னிலும் வயதுமூத்த அரசியல் ஆளுமைகளையெல்லாம் அவன் கொன்று கொண்டிருந்தான். ஜனநாயக அரசியல் என்பது அவனுக்கு அலர்ஜி !
சமூகங்கள் அனைத்திற்குமான இயல்பான ஒரு வாழ்க்கைக்கு  அவன் இருப்பு எப்போதும்  அச்சுறுத்தலாயிருந்தது.
எப்போதும் வலிந்த ஒரு போரை நடத்திக்கொண்டு தன்பாதுகாப்பில் மிகக் கவனமாயிருந்தான். 20 000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் அவன் யுத்த வலயத்திற்கு இழுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
மிகப்பெரிய கோழை அவன்.தன்னை எப்போதும் கொல்ல எல்லோரும் காத்திருக்கிறார்கள் என சந்தேகத்திலேயே அவன் வாழ்க்கை அமைந்தது.
நீடித்த ஒரு போரில் தன் சமூகமும் தனது அமைப்பும் அழிந்துகொண்டிருப்பதையிட்டு அவனுக்கு எந்த மதிப்பீடுகளும் இருந்ததில்லை. எதையுமே அவனால்  புரிந்துகொள்ளமுடியாத மனக் கட்டமைப்பைக் கொண்டிருந்தான்.

ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களின் பின்சீட்டில் அமரும் சிறுவர்களை பாதுகாக்கும் பெல்ட்

செல்லபுரம் வள்ளியம்மை  :   ஸ்கூட்டர்,  மோட்டார் சைக்கிள், சைக்கிள்  போன்றவற்றின்  பின்னால் அமர்ந்து செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு சிறிய பெல்ட் இந்த சிறுவர்களின் பாதுகாப்பை ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன்
ஆனால் பலருக்கும்  இப்படி ஒரு பாதுகாப்பு பெல்ட் இருக்கும் விடயமே இங்கு தெரியாது ,
எதுவித பாதுகாப்பு பெல்டும் அணியாமலே தினமும் ஆயிரக்கணக்கான சிறுவர் குழந்தைகள்  மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து பயணிக்கிறார்கள்.
படத்தில் இருப்பது போல ஒரு சாதாரண பெல்ட் இவர்களது பாதுகாப்புக்கு பெரிய உதவியாக இருக்கும்
நானும் எத்தனையோ பேரிடம் இங்கு இதைபற்றி பேசி பார்த்துவிட்டேன்

டிசம்பர் 15-ம் முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை

 தினத்தந்தி  : புதுடெல்லி,  சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.
 தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமானபோக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.  ”ஏர்  பபுள்” என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

திமுக காங்கிரஸ் கூட்டணி உறவை சீர்குலைக்கும் கரூர் எம்பி ஜோதி மணி...

May be an image of 5 people, people standing and outdoors

Venkat Ramanujam  :  கரூர் மாவட்டத்தில்  நடப்பது என்ன?
ஜோதிமணி வெற்றிக்காக அப்பகுதி காங்கிரசுடன் இணைந்து 2019 ஆண்டில் இரவு பகலாக உழைத்த திமுகவை..
முக்கியமாக தற்போதைய அமைச்சர் அப்போது மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி களத்தில் செய்த உழைப்பை திமுகவை விட்டுவிடுங்கள் ..
அப்பகுதியில் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர்களும் புறம் தள்ளிவிட முடியாது தானே..
அப்படி ஆதரவு தந்த கட்சியின் ஆறுமாத கால ஆட்சியை எதிர்த்து ..
அந்தக் கட்சி   பிரமுகர்களிடம்  பேசி சுமுகமாக தீர்த்து முடிக்க முயலாமல் ஏன் கரூர் எம்பி ஜோதிமணி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் கடந்த இரு நாட்களாக நிகழ்த்த வேண்டும்..
மாவட்ட கலெக்டர் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து ஜோதிமணி நேரில் சந்தித்த பின்னரும் கரூர் எம்பி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதன் நோக்கம் என்ன. .

திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிய பின்பும் ஜெயா சசி கொள்ளை அடித்த சொத்துக்களை அரசுடைமையாக்க என்ன தயக்கம் ?

May be an image of tree and outdoors
May be an image of 2 people

Mani Maran  : 1967ல் சென்னை போயஸ் தோட்டத்தில் அந்த வீட்டை ஜெயலலிதாவின் தாய் சந்தியா வாங்கியபோது அதன் மதிப்பு 1.32 லட்சம் மட்டுமே. தொடர்ந்து அவ்வப்போது சில ஆயிரங்களில், சிறியளவில் புனரமைக்கப்பட்டு வந்தாலும், 91ல் ’ஜெ’ முதல்வரான பிறகே அக்கம் பக்கத்திலுள்ள நிலங்களையெல்லாம் மிரட்டி வாங்கி, கோடிகளை கொட்டி, 24 ஆயிரம் சதுர அடிகள் பரப்பளவில் மிக பிரமாண்டமாக உருவானது ’வேதா நிலையம்’.
இந்த பங்களாவிற்கு  எடப்பாடி அரசு வழங்கிய இழப்பீடு தொகையே 67 கோடிகள். இந்த அடிப்படையில் இதன் உண்மையான மதிப்பு 150 கோடிகளை தொடும். இத்தனை மதிப்புமிக்க பங்களா, ஜெயலலிதாவின் சினிமா சம்பாத்தியத்தில் கட்டப்பட்டதல்ல என்பது ஊரறிந்த உண்மை. ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளை பணத்தில்தான் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது.

கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீதான கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு உத்தரவு

 மின்னம்பலம் :   திமுக எம்.பி ரமேஷ் மீதான கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில் திமுக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜு என்ற ஊழியர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி எம்.பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் நான்கு நாட்கள் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 19ஆம் தேதி எம்.பி ரமேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்திய மியான்மர் எல்லையில் நில நடுக்கம்! 6-1 .ரிச்டர் ! கொல்கத்தா, வட கிழக்கு மாநிலங்களில் அதிர்வு

 Veerakumar -   Oneindia Tamil :  டெல்லி: இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக, திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் கொல்கத்தா வரை உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன
"இது நான் உணர்ந்த மிக நீண்ட நிலநடுக்கங்களில் ஒன்றாகும்" என்று மிசோரமின் தென்சால் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அச்சத்தோடு தெரிவித்தார்

மன்சூர் அலிகான்: நடிகன் என்பதால் இப்படியா? செல்லப்பூனையின் உயிர் பறிபோனது .. நீதிமன்ற அனுமதியை ஏற்க மறுத்த நடிகர்!

Mansoor alikhan refused to go inside the house with the permission of the judge

tamil.asianetnews.com : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான் (Mansoor Ali khan), சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர். தனக்கென அரசியல் கட்சி ஒன்றையும் துவங்கியுள்ள இவர், பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் அறப்போராட்டங்கள் மூலமாக முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதற்க்கு சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர். தனக்கென அரசியல் கட்சி ஒன்றையும் துவங்கியுள்ள இவர், பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் அறப்போராட்டங்கள் மூலமாக முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதற்க்கு சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.

ஆவி நாயுடன் தனது செல்ல நாய் விளையாடிய ..CCTV வி காணொளி .. அவுஸ்திரேலியாவில் திகில்

தினத்தந்தி  : தனது செல்ல நாய் பேயாக வந்த ஒரு நாயுடன் விளையாடியதாக ஒருவர் கூறி சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனை பலர் புரளி என மறுத்து உள்ளனர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் டிமார்கோ என்பவர், தனது வீட்டு முன்பு தனது செல்ல நாய்க்குட்டி, பேய் நாயுடன் விளையாடியதாக கூறி தனது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை வெளியிட்டு உள்ளார்.
31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை கேட்டர்ஸ் நியூஸ் ஏஜென்சி யூடியூப்பில் வெளியிட்டது. இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இருப்பினும், சமூக ஊடகத்தில் பேய் நாய் என்று நம்ப மறுத்து, பலர் தங்கள் எதிர் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.

வியாழன், 25 நவம்பர், 2021

கரூர் மாணவி தற்கொலை - மாணவர்களின் சந்தேக கிண்டல்களால் மனமுடைந்த கணித ஆசிரியர் தற்கொலை

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்- உருக்கமான கடிதம் எழுதி வைத்து கணித ஆசிரியர் தற்கொலை

maalaimalar:  மாணவி இறப்புடன் தன்னை தொடர்புபடுத்தியதை தாங்க முடியாமல் துயர முடிவை எடுப்பதாக கணித ஆசிரியர் தற்கொலைக்கு முன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.
கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி சாவதற்கு முன்பு ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில், நான் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்கிறேன். பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்கணும் என உருக்கமாக கூறியிருந்தார். இது கரூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 நக்கீரன் செய்திப்பிரிவு  : வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றயது.

கேஸ் சிலிண்டர் கலவை மாற்றங்களே வெடித்துச் சிதறக் காரணம் – வெளியானது அதிர்ச்சித் தகவல்

ஜேவிபி நியூஸ் : எரிவாயு (கேஸ்)  சிலிண்டர்கள் கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே அவை தற்போது வெடித்துச் சிதறக் காரணம் என இலங்கை நுகர்வோர் நல விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இலங்கையின் பல இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து எரிவாயுக் கசிவு குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்த போதிலும் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்காக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன

கனமழை சிவப்பு எச்சரிக்கை! ஆறு மாவட்டங்களில் ... ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம்..

 மாலைமலர் : திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை ரெட் அலர்ட்: மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

கரூரில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பயின்ற பள்ளியின் ஆசிரியரும் தற்கொலை!

  News18 Tamil  : கரூரில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி பயின்ற பள்ளியில்,
கணித ஆசிரியராக பணியாற்றிய சரவணன் என்பவர் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி அவரது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.  

திமுக வரலாற்றில் மாநாடு என்றால் வீரபாண்டியரின் 1999ஆம் ஆண்டு சேலம் திமுக பொன்விழா மாநாடு தான்.


A Sivakumar
  :  திருச்சி என்றாலே மாநாடு தான் என்பதெல்லாம் அண்ணன் கே.என்.நேரு பொறுப்பேற்ற பின் ஏற்பட்ட வரலாறு.
அதற்கு முன்னால், மாநாடு என்றால் அது 1999ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திமுகவின் பொன்விழா மாநாடு தான்.
நடத்தியவர் சேலத்து சிங்கம் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள்.
மதியம் 4 மணி அளவில் ஆரம்பித்த பேரணி விடிய விடிய நடந்துக்கொண்டே இருந்தது.
அடுத்த நாள் காலை 7 மணி ஆகியும் முடியவில்லை.
அந்தளவுக்கு தமிழ்நாடு முழுக்க இருந்து வந்து சேர்ந்த திமுக தொண்டர்களுக்கு அத்தனை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த முதல் மாநாடு சேலம் மாநாடு தான்.
செய்தவர் வீரபாண்டியார் தான்!