நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பு. அந்த
அமைப்பில் உள்ள பலரும் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை அவர்கள் நடித்த
படங்களில் காட்சிப்படுத்தியவர்கள். திரைப்படத்தில் பெண்களுக்கு எதிரான
செயல்களை கட்டுப்படுத்த இவர்கள் விதிமுறைகளை உருவாக்குவார்கள் என
எதிர்பார்க்க முடியாது.
வியாழன், 24 டிசம்பர், 2015
பெண்களை போக பொருளாக்கிய சினிமாவின் பரிணாம வளர்ச்சிதான் பீப்....சிம்பு அனிருத் மட்டும் அல்ல எம்ஜியாரில் இருந்து
நீங்களும் வாங்க...திமுகவுடன் சேர்ந்து கூட்டணி....விஜயகாந்த் வைகோ கோஷ்டிக்கு...அட்டுவைசு ..
சென்னை: தி.மு.கவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் நீங்களும்
வாருங்கள் என்று தம்மை சந்தித்த வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி
தலைவர்களுக்கு ஆலோசனை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளாராம் தே.மு.தி.க.
தலைவர் விஜயகாந்த்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை கடந்த வாரம் சந்தித்தனர்.
எப்படியும் விஜயகாந்த்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தக்க வைத்து
கொள்ளலாம் என்பது அவர்களது கணக்கு.
ஆனால் விஜயகாந்த் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று
நிபந்தனை விதித்ததால் பா.ஜ.க. தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும்
இன்னமும் நம்பிக்கையை சற்றும் விட்டுக் கொடுக்காமல் பா.ம.க, தே.மு.தி.க.வை
எப்படியும் இழுத்துவிடுவோம் என்கிற அசாத்திய தைரியத்தில் இருக்கிறது
பா.ஜ.க.
புதன், 23 டிசம்பர், 2015
சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள்...செல்போன் ஆப் செய்யபட்டுள்ளது
மக்கள் நலகூட்டணி தலைவர்கள் சந்திப்பு.....
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தள்ளனர்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலப்பணிகளை பாராட்டிப்பேசினார். அதனால் நன்றி செலுத்தும் விதமாக அவரைச்சந்தித்தோம். எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் அணிக்கு வருவார் என்று நம்புகிறோம்’’ என்றார் nakkheeran,in
கமிஷன் அதிகரிப்பால் அலறும் கான்ட்ராக்டர்கள் இயற்கை சீற்றங்களாலும் அடிக்குது யோகம்
தேனி: ரோடு, கட்டுமான பணிகளுக்கு 45 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டி உள்ளதால், ஒப்பந்த பணிகளை எடுக்க விருப்பம் இல்லாமல் கான்ட்ராக்டர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். இயற்கை சீற்றங்கள் மூலம் பேரழிவு ஏற்பட்டால் கூட, அங்கு நடக்கும் வளர்ச்சிப்பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் பெரிய அளவில் ஆதாயம் பார்த்து விடுகின்றனர் என கான்ட்ராக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அள்ளிக் குவிக்கப்போகின்றனர்.
கலைஞர் பதில் :தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும்
சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று
விரும்புவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அண்மையில் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து
பேசியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள்
வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர்
விஜயகாந்த்தை சந்தித்தனர்.
அப்போது மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வேண்டும் என்று அவர்கள்
விஜயகாந்த்திடம் வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்
இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இந்த
சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
சகாயமோ ட்ராபிக் ராமசாமியோ வரமாட்டாங்களா...?who இஸ் next பெஸ்ட்?
இப்படி எந்த அலையும் இல்லாத சமயங்களில் யாராவது புது ஆள் வந்துவிட மாட்டாரா
என்று ஒரு கூட்டம் யோசிக்கத் தொடங்குகிறது. ட்ராபிக் ராமசாமி வந்தாலும்
பரவாயில்லை; சகாயம் வந்தாலும் பரவாயில்லை என்று பேச்சை ஆரம்பிக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி சகாயத்தை முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்று
அந்தக் கூட்டம் நம்புகிறது. டெல்லி போன்ற சிறிய, படித்தவர்கள் அதிகமாக
வாழ்கிற, நகர்ப்புற மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள்
தமிழ்நாட்டிலும் அதே ஃபார்முலாவில் சாத்தியமாகும் என்று நம்ப
வேண்டியதில்லை. சென்னையிலும் கோவையிலும் திருச்சியிலும் வாக்களிப்பவர்கள்
மட்டும் வாக்காளர்கள் இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவாகிற அறுபத்தைந்து
சதவீத வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் கிராமப்புறத்தில் வாழ்கிற
எளிய மக்களின் வாக்குகள். இவர்களிடம் சகாயம் மாதிரியானவர்களைக் கொண்டு
சேர்ப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. பீப் பாடலைக் கேளுங்கள் கனம் கோர்ட்டார்.....அய்யய்யோ வேண்டவே வேண்டாம்...நீதிபதி கேட்க மறுப்பு
சிம்பு - அனிருத்தின் பீப் பாடலை கேட்குமாறு வக்கீல்கள் கேட்டுக்
கொண்டதற்கு, மறுப்பு தெரிவித்துவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன்.
அனிருத்துடன் இணைந்து ஆபாசப் பாடல் பாடிவிட்டு, இப்போது கடும் எதிர்ப்பும்
கைதாகும் சூழலும் உருவானதால் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்துள்ளார் சிம்பு.
High Court judge denied to hear abusive Beep Song
இந்த மனுவை நீதிபதி ராஜேந்திரன் இன்று விசாரித்தார். அப்போது, சிம்புவுக்கு
முன்ஜாமீன் தரக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன தமிழக அரசுத்
தரப்பு மற்றும் மகளிர் அமைப்புகள்.
விசாரணையின் போது, அந்த பீப் பாடலை ஒருமுறை கேட்டபிறகு தீர்ப்பு வழங்குமாறு
நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், நீதிபதி ராஜேந்திரனோ
அந்தப் பாடலை கேட்கவே தாம் விரும்பவில்லை என்று கூறிவிட்டார் //tamil.oneindia.com
2ஜி ஸ்பெக்ரம் வழக்கில், அரசின் இறுதிக்கட்ட வாதங்கள் நிறைவு.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், அரசின் இறுதிக்கட்ட வாதங்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிபிஜ தொடர்ந்த வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அதோடு, மூன்று நிறுவனங்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞரான ஆனந்த குரோவர், கடந்த 8 மாதங்களாக குற்றஞ்சாட்டபட்டவர்களுக்கு எதிரான சிபிஐ-ன் வாதத்தை முன் வைத்து வந்தார்.
இந்த வழக்கில் மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அதோடு, மூன்று நிறுவனங்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞரான ஆனந்த குரோவர், கடந்த 8 மாதங்களாக குற்றஞ்சாட்டபட்டவர்களுக்கு எதிரான சிபிஐ-ன் வாதத்தை முன் வைத்து வந்தார்.
செவ்வாய், 22 டிசம்பர், 2015
சிம்புவுக்கு முன்ஜாமீன் கிடையாது....கொம்பு சீவி தறுதலையாக வளர்த்த ராஜேந்தரும் குற்றவாளிதான்
பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு முன் ஜாமீன் வழங்க தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது
ஆபாச சொற்களுடன் கூடிய பீப் பாடல் பாடி அதனை வெளியிட்ட குற்றத்திற்காக
சிம்பு, அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக
உத்தரவிட்டனர். ஆனால் இருவருமே கோவை போலீசார் சொன்ன தேதியில் நேரில்
ஆஜராகவில்லை. இதனால் வருகின்ற ஜனவரி 2 ம் தேதி சிம்பு, அனிருத் இருவரும்
நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை சென்னை விமான நிலைய கூத்து...சாரா வில்லியம்சுக்ககாக சாரா தாமசை சிறையில்...இரண்டு லட்சம் அபராதம்
சென்னை விமான நிலையத்தில் பெண் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுக்ளுக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரா வில்லியம்ஸ். வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த இவர், கேரள மாநில சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சேலையூரைச் சேர்ந்த சாரா தாமஸ் என்பவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாரா தாமஸ் தவறுதலாக கைது செய்யப்பட்டதாக கூறி விடுவிக்கப்பட்டார்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரா வில்லியம்ஸ். வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த இவர், கேரள மாநில சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சேலையூரைச் சேர்ந்த சாரா தாமஸ் என்பவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாரா தாமஸ் தவறுதலாக கைது செய்யப்பட்டதாக கூறி விடுவிக்கப்பட்டார்.
உடுமலை வனத்தில் 3 கிமீ சட்டவிரோத சாலை....சந்தனமர கடத்தல்....
உடுமலை: உடுமலை வனத்தில் தடை மீறி 3 கிமீ சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக
மரங்களை வெட்டி சாய்த்து, பாறைகளை உடைத்துள்ளனர். இது குறித்து வனத்துறை
குழு விசாரணையை துவக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்தில் தடை
மீறி 3 கிமீ தூரத்துக்கு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாறைகள்
உடைக்கப்பட்டு, ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது சந்தனமர கடத்தல்
கும்பலின் வேலையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 30 பேர் கொண்ட
வனத்துறையினர் இன்று அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில்
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள்
உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இங்கு மலைவாழ் மக்கள் வாழும் ஏராளமான
செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன.
வாக்கு சீட்டிலும் ஸ்டிக்கர் ஓட்டுவோம்ல.....இனி அது மட்டும்தான் சாத்தியம்?
அரசுப் பணியில் இருந்தபோதே அம்மாதான் எனக்கு பிடித்த தலைவர் என்று
பேட்டி கொடுக்கிறார் அந்த அதிகாரி. பணிக்காலம் முடிந்தபின் பணியாளர்
தேர்வாணையத்தின் தலைமை பதவியே பரிசாக கிடைக்கிறது. அதுவும் காலாவதி ஆனபின்
தோட்டத்துக்கே வரவழைத்து உறுப்பினர் அடையாள அட்டை கொடுத்து கட்சியில்
சேர்த்துக் கொள்கிறார் தலைவி.
அப்படிப்பட்ட விசுவாசமான ஒரு உண்மைத் தொண்டன் ஒரு டீவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசை கடுமையாக விமர்சனம் செய்வதாக ஒரு தகவல் வருகிறது.
தலைவியின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன செய்வோம்? “அவருக்கு ஃபோன் போட்டு கொடு, என்னானு கேக்கிறேன்” என்பதுதானே குறைந்தபட்ச ரியாக்ஷனாக இருக்கும். “ஏன் அப்படி பேட்டி கொடுத்தார் என்று அவரிடம் விசாரித்து எனக்கு ஒரு ரிப்போர்ட் கொடுங்கள்” என்று கட்சியிலோ அரசிலோ நமது நம்பிக்கைக்கு உரிய நபரிடம் கேட்டுக் கொள்வோம், இல்லையா.அட்லீஸ்ட், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் அந்த ஆள்? ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்புங்கள்” என்போம்.
அப்படிப்பட்ட விசுவாசமான ஒரு உண்மைத் தொண்டன் ஒரு டீவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசை கடுமையாக விமர்சனம் செய்வதாக ஒரு தகவல் வருகிறது.
தலைவியின் இடத்தில் நீங்களோ நானோ இருந்தால் என்ன செய்வோம்? “அவருக்கு ஃபோன் போட்டு கொடு, என்னானு கேக்கிறேன்” என்பதுதானே குறைந்தபட்ச ரியாக்ஷனாக இருக்கும். “ஏன் அப்படி பேட்டி கொடுத்தார் என்று அவரிடம் விசாரித்து எனக்கு ஒரு ரிப்போர்ட் கொடுங்கள்” என்று கட்சியிலோ அரசிலோ நமது நம்பிக்கைக்கு உரிய நபரிடம் கேட்டுக் கொள்வோம், இல்லையா.அட்லீஸ்ட், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் அந்த ஆள்? ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்புங்கள்” என்போம்.
அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என பிரதமர் சூசகமாக தெரிவித்துள்ளார்: சீதாரம் யெச்சூரி
புதுடெல்லி,
ஊழல்
புகாரில் சிக்கியுள்ள அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் மோடி
சூசகமாக தெரிவித்துள்ளார் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
டெல்லி
கிரிக்கெட் சங்க முறைகேடுகளில் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாகவும்
இதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை
விடுத்து வரும் நிலையில், இன்று இவ்விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி,
ஹவாலா மோசடி வழக்கில் இருந்து குற்றமற்றவராக அத்வானி வெளிவந்தது போல, அருண்
ஜெட்லியும் இந்த வழக்கில் இருந்து விடுபடுவார் என்று பேசியிருந்தார்.
இந்த
நிலையில், இது குறித்து இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்த சீதாராம் யெச்சூரி கூறியதாவது:- “அத்வானி பெயருடன் இணைத்து
பேசியதன் மூலம், அருண் ஜேட்லி ராஜினாமா செய்து புகார்களிலிருந்து விடுபட்டு
மீண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி சூசகமாகத் தெரிவிப்பதாகவே நான்
நினைக்கிறேன்.
மாநிலங்கள் அவையில் சிறார் குற்ற சட்டம் நிறைவேறியது . ராகுல்காந்தியிடம்...ஜோதி சிங்கின் பெற்றோர்
பிந்திய செய்தி: மாநிலங்கள் அவையில் சிறார் தண்டனை மசோதா நிறைவேறியது, Under the new law, those in 16-18 age group will be be examined by
Juvenile Justice Board to assess if crime was committed as child or
adult.:மாநிலங்களவையில், சிறார் சட்ட திருத்த மசோதா மீது இன்று நடைபெற்று வரும் நிலையில், அவை நடவடிக்கைகளை கவனிக்க நிர்பயா பெற்றோர் மாநிலங்களவைக்கு வருகை தந்துள்ளனர். சிறார் சட்டத்தில் திருத்தம் செய்வதின் மூலம், கொடூர குற்றங்கள் புரியும் 16-18 வயதுடையவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்த முடியும்.
10 லட்சம் ..அகதிகள் போர்வையில் இஸ்லாமிய....ஐரோப்பிய மக்கள் விசனம்
கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறியுள்ளது.
Image caption ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது
இது கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர்.
3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூறியுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த திங்களன்று எட்டப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை மார்க்கமாக வந்தவர்களின் எண்ணிக்கை 1,005,504 ஆகும் என்றும் அது கூறுகின்றது.
கிரேக்கம், பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், மால்டா மற்றும் சைப்பிரஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஊடாக வந்தவர்களே இவர்களாவர்.
455,000 பேர் சிரியாவைச் சேர்ந்த அகதிகள், 186,000 க்கும் அதிகமானோர் ஆப்கானில் இருந்து வந்துள்ளனர். bbc.தமிழ்.com
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்....சிம்பு அனிருத் பாட்டால் நொந்துபோனவர்களுக்கு ஆறுதல்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே
உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத்தான்காடு) என்ற கிராமத்தில் எளிய
விவசாயக் குடும்பத்தில் (13.4.1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக்
கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு
வரை படித்தார்.குடும்பத் தொழிலான விவசாயம்
மட்டுமின்றி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, முறுக்கு
வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும்
தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர்,நடனக்காரர், உப்பளம், நாடகம், மாம்பழ
வியாபாரம், இட்லி கடை என 15-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல்
பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச்
செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை
வெளியிட்டுவந்தது. இந்த பாடலில் படத்தின் கதையையே மிகவும் அழகான கவிநயத்துடன் எடுத்துரைக்கிறார் பட்டு கோட்டையார் .இவரல்லவோ கவிஞர்.
அனுஷ்கா சருமா :100 கோடி வசூலை குறி வைப்பதால் நல்ல படங்களே வருவதில்லை....
அழகான
நடிகை அனுஷ்கா சருமா கோபத்தில் கொதிக்கிறார். திரையுலகில்
நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே பெரும் பாகுபாடு காட்டப்படுகிறது, பெண்கள் வெறும் அழகுப் பொம்மைகளாகத்தான் நடத்தப்படுகின்றனர் என்பது அனுஷ்காவின் ஆத்திரத்துக்குக் காரணம். ‘‘சினிமாவில் பெண்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும். நாயகனை ஈர்க்கக்கூடிய அளவுக்கு அவர்கள் தேவதை போன்று தோன்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் மட்டும் தங்கள் வயது தாண்டியும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க, ஹீரோயின் மட்டும் இளம்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? இதில் ஒரு பாலியல் சார்ந்த பார்வை இருக்கிறது. நடிகைகள் தங்களின் சில அங்கங்களைக் காட்டுவது, அழகாக நடனமாடுவது தவிர நமது சினிமாக்களில் அவர்களுக்கு என்ன இடம் இருக்கிறது? இதுபோன்ற படங்களை பெரிய நடிகர்கள் ஆதரிப்பதுதான் இம்மாதிரியான படங்கள் வெளியாகக் காரணம்’’ என்று சீறித் தள்ளுகிறார், அனுஷ்கா.
16 வயது சிறுவனையும் தண்டிக்க சட்டம்...டெல்லி மேல்–சபையில் இன்று விவாதம்
புதுடெல்லி
கொடிய குற்றங்களுக்காக
16 வயது சிறுவனையும் விசாரிப்பதற்கான திருத்தத்துடன் கூடிய இளம்
குற்றவாளிகள் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு குவிகிறது. டெல்லி மேல்–சபையில்
அம்மசோதா இன்று விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விசாரிக்கலாம் டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட நிலையில், இளம் குற்றவாளிகள் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, டெல்லி மேல்–சபையில் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், கொடிய குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தலாம்.
தமிழகம், கேரளா, மே.வங்கம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல்.....ஆணையம் திட்டம்
டெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டமன்ற
தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல்
ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக சட்டமன்ற
தேர்தலை தாமதமாக நடத்த சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சூழலில் தேர்தல் அட்டவணையை மாற்றும் திட்டம் எதுவும் தேர்தல்
ஆணையத்திற்கு இல்லை. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ள
பாதிப்பில் இருந்து மீண்டு வருகிற நிலையில், விரைவில் வாக்கு இயந்திரங்கள்
அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை நடத்தவும் தேர்தல்
ஆணையம் திட்டமிட்டுள்ளது.
Tamil Nadu, Kerala, West Bengal and Assam polls in April-May
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம், கேரளா, மேற்கு
வங்காளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே
மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜவடேகர் : கனமழை பெய்யும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டது ...மாநிலஅரசு.......?
கனமழை பெய்யும் என 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது: பிரகாஷ் ஜவடேகர்
நாட்டில் நிலவும் வறட்சி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பிரச்சனைகள் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பெருமளவு வெள்ளம் ஏற்படப்போகிறது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கையைக் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிர்வாகத் தோல்வியால் 400 உயிர்களை இழந்துள்ளோம்.
நாட்டில் நிலவும் வறட்சி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பிரச்சனைகள் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பெருமளவு வெள்ளம் ஏற்படப்போகிறது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கையைக் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிர்வாகத் தோல்வியால் 400 உயிர்களை இழந்துள்ளோம்.
திங்கள், 21 டிசம்பர், 2015
நேபாள பெண் கற்பழித்து கொலை! 7 பேருக்கு தூக்குத் தண்டனை ஹரியான மாநிலத்தில்
சண்டீகர்: ஹரியான மாநிலத்தில் மனநலம் பாதித்த நேபாளப் பெண்ணை கொடூரமாக
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பலைச் சேர்ந்த 7 பேருக்கு ரோதக்
நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த ஒரு பெண் ஹரியாண மாநிலம் ரோக்டெக்
நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த
பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அந்த
பெண்ணின் உறவினர்கள் ரோதக் போலீசில் புகார் செய்தனர்.
7 get death for gangrape and murder of nepal woman in Rohtak
ஆனால், 4-ந்தேதி ரோதக் அருகில் உள்ள பாகு அக்பர்பூர் கிராமத்தில் ஒரு
வயலில் அந்த பெண்ணின் பிணம் கிடந்தது.
கரகாட்டகாரி தமிழிசை சவுந்தரராஜன் விவகாரம் ..இளங்கோவன் மீது புகார் ...மாதர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை அவதூறாக பேசியதற்காக,
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழ்நாடு
சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், கமிஷனர் ஆபீசில் புகார் மனு
அளித்தனர்.
பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கரகாட்டக்காரி, பொய்க்கால்
குதிரையாட்டக்காரி என்று பொருள்பட பேசியிருந்தார் இளங்கோவன்.
பொய்க்கால் குதிரையாட்டக்காரி என்று பொருள்பட பேசியிருந்தார்
டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு..மோடியிடம் ஆதரவு கோரும் கெஜிரிவால்
டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை அமல்ப்படுத்த மோடியிடம் ஆதரவு கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.
டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க பல்வேறு
நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி அரசு ஒரு
திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஒற்றைப்படை பதிவு எண்களை
கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும். அதேபோல்
இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும்
சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து
கார்களையும் இயக்கலாம்.
சிம்பு -அனிருத்துக்கு பாதுகாப்பு.....கோவன் பாட்டுக்கு தேசதுரோக வழக்கு...இதுதான் மேட்டுக்குடி வாழ்வியல்
மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது
செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது
செக்ஸ் பாடகன் சிம்புவையும் பக்கவாத்தியம்
அனிருத்தையும் கண்டிக்கும் வகையில், தி,நகர் மாசிலாமணி தெருவில் உள்ள
சிம்பு வீட்டின் முன்பாக முற்றுகை ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு
பெண்கள் விடுதலை முன்னணி சார்பில், தோழர் விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது,
அதில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர்
கலந்துக் கொண்டனர்.
சிம்புவின் வீட்டிற்கு செல்வதற்கு நான்கு வழிகள்
இருந்ததால் காவல் துறை நம்மிடம், “மேடம் எந்த இடத்தில் பண்ண போறீங்க, நாம
ஒரு understand-ல் பண்ணலாம்.” என்று சரியான இடத்தை சொல்ல சொல்லி காலையில்
இருந்தே தொந்தரவு பண்ண தொடங்கி விட்டார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










