சனி, 3 ஜனவரி, 2015

உலக நிர்வாண சங்கத்தை தொடங்கியவர் காலமானார் ! 103 வயது Funeral for naturist Christiane Lecocq held in Paris

அளவில் இயற்கையாளர்கள் அல்லது ஆடைகளற்று வாழ்பவர்களுக்கான சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கிறிஸ்டியான் லெகாக்கின் இறுதி நிகழ்வுகள் பாரிஸில் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய இரவில் தமது 103ஆவது வயதில் அவர் காலமானார்.
இயற்கையாக வாழ்வது அதாவது ஆடைகளற்று நிர்வாணமாக வாழ்வது எனும் கலாச்சாரத்தை 1933ஆம் ஆண்டு முதல் பின்பற்றத் தொடங்கிய அவர், உலக இயற்கையாளர்கள் சம்மேளனம் எனும் அமைப்பை இதற்காகத் தொடங்கிட உதவினார்.
விடுமுறை காலத்தில் ஆடைகள் இல்லாமல் இருக்கும் அனுபவத்தை கூடுதலாக முன்னெடுப்பதே தமது லட்சியம் என்று கூறும் அந்த அமைப்பு, நிர்வாணம், சமூக மற்றும் சுகாதார அனுகூலங்களை அளிக்கும் என்று கூறுகிறது.
கிறிஸ்டியன் லெகாக் அம்மையார் மற்றும் அவரது கணவர் ஆல்பர்ட் இணைந்து உலக அளவில் முதல் முறையாக இயற்கையான முறையில் நிர்வாணமாக விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு மையத்தை, தென்மேற்கு பிரான்ஸில் தொடங்கினர்.

லிங்கா பில்டப் மோசடி அம்பலம் ! செலவு 45 கோடி ! அள்ளியது 220 கோடி! விநியோகஸ்தர்கள் ஒப்பாரி உண்ணாவிரதம்!

லிங்கா படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால் பல கோடிகள் நஷ்டம். திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர். எனவே, நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும்" என்று விநியோகஸ்தர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், 'லிங்கா' படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஒரு பதில் சொல்லுங்கள் என்று விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஜனவரி 10-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதை ’லிங்கா’ திரைப்படத்தின் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார். ஒரேயடியாக ரஜினிக்கு பில்டப் கொடுப்பதன் மர்மம் இதுதான் ,அதிக விலைக்கு விற்பது! தியேட்டர்காரர்களும் பிளாக்கில் டிக்கெட் வித்து போட்ட காசை எடுக்கட்டும் என்ற திருட்டு புத்தியின் ஆணிவேரே இந்த மாதிரி ரஜினி ஷங்கர் கும்பல்கள்தான் . திருட்டு டிவிடியை  ஒரு தேச சேவையாக கருதிவேண்டி இருக்கிறது

மோசடி சர்ச்சையில் ஈசா யோகா மையம்! லிங்கபைரவ business ஜோர் ஜோர்

கோவை: லிங்க பைரவ சிலைக்காக ரூ.4.50 லட்சம் பெற்றுக் கொண்டு உடைந்த சிலையை தந்து ஏமாற்றியதாக கோவையில் உள்ள ஈசா யோகா மையம் மீது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். போலீஸ் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து பணத்தை ஒப்படைத்தது ஈசா யோகாமையம். இதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்றார் ஸ்வீடன் பெண். ஸ்வீடன், பாகர்மூசன் ஸ்டாக் ஹோமைச் சேர்ந்தவர் ஜெயா பாலு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர், கடந்த 16-ம் தேதி ஸ்வீடனிலிருந்து இந்தியா வந்துள்ளார். பண மோசடி சர்ச்சையில் ஈசா யோகா மையம்! டிசம்பர் 23ஆம் தேதி, கோவை பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற லிங்க பைரவ யந்திர விழாவில் கலந்து கொண்டார். அப்போது, யோக மையத்தில் 160 கிலோ லிங்க பைரவ சிலை வேண்டி, கோயில் நிர்வாகத்திடம் ரூ.4.50 லட்சத்தை வெளிநாட்டு வங்கி கிரெடிட் கார்டு மூலமாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.business

அரூபம் ஒரு ஆவிகளின் கதை ! காப்பியாய் இல்லாதவரைக்கும் ஆவியாய் இருக்கலாம்

மிருகங்களுக்கு பயந்து ‘அரூபம்' பட குழுவினருடன் மலை உச்சியிலேயே 3 நாள் முகாமிட்டார் தர்ஷிகா. இதுபற்றி பட இயக்குனர் வின்சென்ட் ஜெயராஜ் கூறியது:நிறைவேறாத ஆசையுடன் இறந்தவர்கள் ஆத்மா இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்பார்கள். இந்த கூற்றை அடிப்படையாக வைத்து இப்பட ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொடைக்கானலில் மிக உயர்ந்த இடமான பல்லங்கி மலை உச்சியில் நடந்தது. அந்த இடத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஹீரோ தேவா, ஹீரோயின்கள் தர்ஷிகா, சஹானா மற்றும் பட குழுவினர் நடந்தே சென்றோம். இரவு நேரத்தில் திரும்பினால் மிருகங்கள் தாக்கும் ஆபத்து இருக்கும் என்று எச்சரிக்கை தரப்பட்டதால் 3 நாட்கள் அங்கேயே முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜெயபாலன் ஒளிப்பதிவு. சுனில் சேவியர் இசை அமைக்கிறார். ஜி.யுவபாலகுமரன் தயாரிக்கிறா - See more at: tamilmurasu.org

தீபா: யட்சன் படத்தின் மூலம் ஒரு ரவுண்டு வருவேன்! வாய்ங்க !

கன்னட நடிகையான தீபா சன்னிதி, 'எனக்குள் ஒருவன்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். அவருடைய இந்த முதல் படம் வெளியாகும் முன்பே அவருக்கு விஷ்ணுவர்த்தன் இயக்கம் 'யட்சன்' படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.ர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தை சொந்த ஊராகக்  கொண்ட மாடல் அழகியான தீபா சன்னதி பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அழகி போட்டிகளில் கலந்துக் கொண்டு வென்றவர். நகைகளை வடிவமைக்கும் கல்வியை படித்து உள்ள இவர் கவிதைகளை எழுதுவதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர்.

திறமை இல்லா பட்டதாரிகள்? கல்வித்துறையின் கோளாறு ?

மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்
இந்திய மக்கள்தொகை 125 கோடி என்றும், அதில் 60% இளைஞர்கள் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். நமது பிரதமர் மோடி உலகெங்கும் சென்று, “இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு. சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் முந்திக்கொண்டு நாங்கள் வெகு விரைவில் வளர்ந்த நாடாகிவிடுவோம். எங்கள் நாட்டில் தொழில் முதலீடு செய்யுங்கள், உற்பத்தி செய்யுங்கள்” என்றெல்லாம் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில், ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ என்றொரு பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது இந்தியா. 45 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகள், அறிவுசார்ந்த எந்த ஒரு வேலைக்கும் ஏற்றவர்கள் இல்லை என்றும், வெறும் 8% முதல் 12% பொறியியல் மாணவர்கள் மட்டுமே வளாக நேர்காணல்களின்போது வேலைக்கு அமர்த்தத் தகுதியுடையவர்களாக இருக் கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.

நிர்மலா சீதாராமன் என்றெரு அசல் பார்ப்பன பெண்ணின் ஆணவம் பொய் பித்தலாட்டம் ?



கட்டிட வேலைக்கு வரும் மலிவான தொழிலாளிகள் ஹிந்தி வடநாட்டினர்தானே  ? சரவணா ஸ்டோர்ஸ் முதல், நாயர் டீக்கடை வரை, மிகக் குறைந்த ஊதியத்திற்கு நாள் தோறும் வேலை பார்க்க, பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி ஹிந்தி படித்தவர்கள் கூட்டம் கூட்டமாக  குடும்பத்தோடு, தமிழ்நாட்டிற்கு ஏன் வர வேண்டும்?

என்னால் ஹிந்தியில் பேச பயமாகவும் தயக்கமாகவும் இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம் என சொல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தித் திணிப்பை எதிர்த்து 1965-இல் போராட்டம் நடைபெற்றபோது, இந்த மாமிக்கு வயது ஆறு. இந்த போராட்டத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. மதுரையில் பிறந்தவர், 1978இ-ல் திருச்சியில் பட்டப்படிப்பை முடித்து, புதுடில்லியில் 1980இ-ல் முதுகலை பட்டம் முடித்திருக்கிறார். புதுடில்லி யில் இருந்த இரண்டு ஆண்டுகளில், அங்கே இவரால் ஹிந்தியை கற்றுக்கொள்ள முடியவில்லையா?
இருமொழிக் கொள்கை காரண மாக, அரசுப் பள்ளிகளில் ஹிந்தி வேண்டுமானால் இல்லாது இருந் திருக்கலாம். ஆனால், இவர் படித்தது எல்லாம் தனியார் பள்ளி, கல்லூரி களில். அதுவும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி என்கிற பார்ப்பனமயமான கல்லூரியில் தான் படித்துள்ளார்.

சானிடரி நாப்கினுக்காக ஒரு முகநூல் போராட்டம்! நாப்கினை அப்புறப்படுத்த வசதி....

நீங்கள் யூஸ் செய்த நாப்கினை தூக்கியெறிய வேண்டாம், நாங்கள் குறிப் பிடும் இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்ற ப்ரொபைல் பிக்சருடன் தடதடக்கிறது ஒரு முகநூல் பக்கம். 'கிஸ் ஆப் லவ்' என்னும் போராட்டத்தின் மூலமாக பல்வேறு விமர்சனங்க ளை சந்தித்த அதே கேரள மண்ணில்தான் இப்படி ஒரு நூதன போராட்டம் தொடங்கியிருக்கிறது. கொச்சியில் உள்ள ’அஸ்மா ரப்பர் புராடக்ட்ஸ்’ என்ற நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்கு, “ பயன்படுத்திய நாப்கினை கழிவறையில் போடக் கூடாது”  என்ற விதிமுறையை விதித்திருக்கிறது. ஆனால் கடந்த மாதம், ஒரு பெண் ஊழியர் தான் பயன்படுத்திய நாப்கினை கவனக் குறைவாக கழிவறையில் போட்டுவிட பதட்டமானது அந்த நிறுவனம். யார் இந்த வேலையை செய்தது என்பதை அறிவதற்காக அங்கு பணிபுரியும் அனைத்து பெண்களின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த விவகாரம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்றிவிட, பெண் போராளிகள் கொதித்துப் போயினர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சோதனையிட்ட இரண்டு பெண் பணியாளர்கள் மீது வழககு தொடரப்பட் டுள்ளது.

ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை! சட்டம் அவாளுக்கு மக்சிமம் வழிந்து கொடுக்கும்?

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசு அதிகாரிகள் சந்தித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கோப்பு படம்
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதைத் தொடர்ந்து முதல்வர், எம்.எல்.ஏ பதவியை ஜெயலலிதா தானாகவே இழந்துவிட்டார்.

வயதான தாயை பெற்ற மகனே பஸ் நிலையத்தில் வீசிய கொடுமை... ஏமாற்றி ஆட்டோவில் அழைத்து வந்து..

சென்னை: வயதான தாயை ஆட்டோவில் ஏற்றி வந்து, பெற்ற மகனே பஸ் நிலையத்தில் வீசி சென்ற கொடுமையை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர். கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் மனைவி சரோஜா (65). இவர், கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் ஒரு டீக்கடை அருகில் பசி, பட்டினியுடன் நோய்வாய்ப்பட்ட நிலை யில் நேற்று கிடந்தார். இதேபோல், உத்திரமேரூர் அடுத்த மருதம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி சரஸ்வதி (80)யும் பஸ் நிலைய பயணிகள் உட்காரும் இடத்தில் பெட்டி, படுக்கைகளுடன் அநாதையாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் அடிபட்டு கிடந்தால்தான் வருவோம் என்று கூறி பிடிவாதமாக வர மறுத்துவிட்ட னர்.

BBC :புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?

மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
எனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இந்த ஆய்வாளர்கள், அத்தோடு கூட மரபணுக்களில் ஏற்படும் விபரீத மாற்றங்களால் மட்டுமே உருவாகும் மூன்றில் இரண்டுபங்கு புற்றுநோய்களை அவற்றின் தோற்றத்தின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகளையும் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

வெள்ளி, 2 ஜனவரி, 2015

மணல் வைகுண்டராஜன் தலைமறைவு ! சிபிஐ யின் நான்கு கோஷ்டிகள் தேடுகின்றன!

<சிபிஐ ஸ்பெஷல் டீம் கிடுக்கிப்பிடி: வைகுண்டராஜன் தலைமறைவு முன்னாள் தூத்துக்குடி துறைமுக பொறுப்புத்துறை கழக தலைவர் சுந்தரம் ஐஏஎஸ். இவர் 2012-ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசனை சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் வைகுண்ட ராஜன். இந்த மனு தள்ளுபடி ஆனதும் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி விடுமுறை கால மதுரை உயர்நீதிமன்றத்தில், ஜாமீன் மனு மீதான விசாரனையை முன் கூட்டியே விசாரிக்ககோரி வைகுண்டராஜன் தரப்பு மனு தாக்கல் செய்தது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். இதையடுத்து, இன்று சிபிஐ, நான்கு ஸ்பெஷன் டீம்கள் அமைத்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கொச்சின், மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் வைகுண்டராஜனை தேடியது. இது தெரிந்ததும் வைகுண்டராஜன் தலைமறைவாகிவிட்டார்.nakkheeran,in

AirAsia இதுவரை 16 உடல்கள் கிடைத்துள்ளன !

ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து இன்று மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.> இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இன்று காலை நிலவரப்படி இந்த விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 7 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 16 உடல்கள் கடல்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், போர்னியோ நகர கடற்கரையோரத்தில் இருந்து சுமார் 1,575 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாவா கடற்பகுதியில் சுமார் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உடல்கள் சிதறி கிடப்பதாக தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய பலர் சீட் பெல்ட்களை அணிந்தபடி பிணமாக கிடப்பதாக கூறப்படுகிறது.

பார்பனர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்? – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா

brahmin1வே.மதிமாறன் :
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய கிராமங்கள் முழுக்கவே அன்றும் இன்றும் தலித் மக்கள் தான் பல பகுதிகளில் உயிருக்கு பயந்து வாழ்கிறார்கள். தொடர்ந்து கொடூரமான முறையில் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்களால், கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல் கூட அல்ல, காரணமே இல்லாமல் வெறும் ஜாதி காழ்ப்புணர்ச்சியால் படுகொலைச் செய்யப்படுகிறார்கள்.
பார்ப்பன அடிமைகளான பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதி வெறியர்கள் + பிற்படுத்தப்பட்டவர்கள் தன்னை ‘சூத்திரன்’ ‘பார்ப்பானின் வேசி மகன்’ என்று இழிவு செய்கிற பார்ப்பனியத்திற்கு எதிராக இதுவரை எந்த வன்முறையையும் நிகழ்த்தியதே இல்லை.

ஸ்ரீபெரும்புதூரில் கொரியா அதிகாரி தமிழ் தொழிலாளியை காலால் மிதிக்கும் விடியோ காட்சி! Make in India?

வேலை நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக 02.01.15 வெள்ளிக்கிழமை காலை முதல் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தென் கொரிய நிறுவனமான NVH India Auto Parts Pvt Ltd -ல் தொழிலாளர்கள் ULF சங்கம் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் தொழிலாளர்களை தென் கொரிய அதிகாரிகள் தாக்கும் காட்சிகளையும், மிரட்டும் காட்சிகளையும் தொழிலாளர்கள் சிலர் தங்கள் செல்போனில் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்தனர். வீடியோவில், தொழிலாளி பூபாலன் என்பவரின் காலை பிடித்து தென்கொரிய அதிகாரி ஒருவரால் இழுத்து வந்து மிரட்டப்படுகிறார். தாக்கப்பட்ட தொழிலாளி பூபாலன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் வீடியோவை வெளியிட்டட சக தொழிலாளர்கள், தமிழக அரசே! கொத்தடிமை கூடாரமா ஸ்ரீபெரும்புதூர்? மோடி அரசே! இது தான் உங்கள் "MAKE IN INDIA" திட்டமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தொழிலாளார் நலத்துறை இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.nakkheeran.in

குஜராத்தில் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகள் கப்பல்! கடற்படை தடுத்ததால் வெடிவைத்து தகர்ப்பு!

Gujarat மாநிலத்தின் போர்பந்தர் கடல்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை தடுத்து நிறுத்தியது. இந்திய கடற்படை நெருங்கிய நிலையில் திடீரென அக் கப்பல் வெடிவைத்து தகர்த்தக்கப்பட்டது. அதில் இருந்த 4 பேரும் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தின் நீண்ட கடல்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்துவதாக உளவுத்துறை பலமுறை தெரிவித்திருந்தது. அத்துடன் கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கப்பல் ஒன்று குஜராத்தை நோக்கி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்திருந்தது.  இதனால் குஜராத் கடல் பகுதியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதியன்று குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்குள் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்றது. உடனடியாக இந்திய கடலோரக் காவல்படை அந்த மீன்பிடிக் கப்பலை நோக்கி சென்றது. அப்போது முன்னெச்சரிக்கையாக துப்பாக்கிச் சூட்டையும் கடலோர காவல்படையினர் மேற்கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் மிக வேகமாக தப்பிச் செல்ல முயன்றது. இந்த முயற்சி பலனளிக்காத நிலையில் திடீரென மீன்பிடிக் கப்பல் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

சிறுமியை கடத்தி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கற்பழித்த போலீசார்!

Uttar Pradesh: A 14-year-old girl was allegedly abducted and gang-raped by two constables inside a police station here in Uttar Pradesh, prompting the authorities to suspend the accused who are absconding. உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள முஸாஜக் போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு, தலைமறைவாக இருக்கும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள குளியலறைக்கு அந்த சிறுமி சென்றாள். அப்போது, வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய இரண்டு போலீசார் அந்த சிறுமியை அருகில் வரும்படி சைகை காட்டி அழைத்தனர். காரருகே சென்ற சிறுமியை பின் சீட்டில் தூக்கி போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த காரை முஸாஜக் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றனர். போலீஸ் நிலையத்துக்குள் இருந்த ஒரு அறைக்குள் சிறுமியை இழுத்துச்சென்ற அவர்கள், அவளை மிரட்டி, அடித்து, சித்ரவதை செய்து கற்பழித்தனர்.

திட்டக்குழு கலைக்கப்படுவது தனியார் துறைக்கு பொருளாதாரத்தை நகர்த்தும் சதி? டாக்டர் ராமதாஸ் கண்டனம்,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியாவில்  65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழு கலைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக நிதி ஆயோக் எனப்படும் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் அமைக்கப் படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்படும் இந்த தொலைநோக்கற்ற மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும்.இந்தியா விடுதலை அடைந்த பிறகு வளர்ச்சிக்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற வினா எழுந்தபோது, அதற்கான விடையாக 1950 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையிலான அப்போதைய அரசு  ஏற்படுத்தியது தான் திட்டக் குழு ஆகும். தொடக்கத்தில் திட்டக் குழு அதன் பணியை சிறப்பாகவே செய்து வந்தது. அதன்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய திட்டக் குழுவை சீரமைக்க வேண்டிய  தேவை ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். ஆனால்,  திட்டக் குழுவையே அடியோடு கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவது தேவையில்லாதது.

Sangeetha (24) murderd by Swamy Niththiyaanandha on 29 december 2014 ? Sudden death of young girl in Nithiyanandha Ashram!


Mysterious & sudden death of a 24 year old brahmacharini of the ashram has raised very serious questions and put the Nithyananda ashram in the center of a controversy once again. Sangeetha's mother has cried foul over the death of her daughter and also registered a complaint against Nithyananda. She also wants re-postmortem to ascertain the cause of death. It was reported that on 29th December 2014 a 24 year old girl called Sangeetha fell down in the ashram and was taken to BGS hospital, but she suffered a heart attack & died on the way to the hospital. Post mortem was conducted in Rajarajeshwari hospital and the report claims she died of heart attack. The young girl has been living in Nithyananda ashram in Bidadi for last 4 years & she had taken sanyas.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இளம்பெண் சங்கீதா(24) கொலை? கேசை ஊத்தி மூட நித்தியானந்தா ......


திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24 வயது மகள் சங்கீதா. இவர், பி.சி.ஏ., படித்த பின்னர், கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன், துறவி பயிற்சிக்கு சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த, 28ம் தேதி, ஆசிரமத்தில் மர்மமாக இறந்தார். ஆசிரமத்தினர் உடனடியாக, சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டு வரப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு, நாவலூர் குட்டப்பட்டுக்கு வந்த உடலை அடக்கம் செய்துவிட்டனர்.சங்கீதாவின் மரணம் குறித்து, வெளியே பேசவோ, ஊடகங்களில் தகவல் தெரிவிக்கவோ கூடாது' என, குடும்பத்தினரிடம், நித்யானந்தா மடத்தில் உள்ளவர்கள் சத்தியம் வாங்கியிருப்பதாக, சங்கீதாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

யுவன் சங்கர் என்கின்ற அப்துல் 3 rd திருமணம் ! என்னாப்பா ஒரே ஆம்பளைங்க போடோவையே காம்பிக்கிறீங்க ? அப்புறம் திருமணம்கிறீங்க?

இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் திருமணம் ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இளையராஜா திருவண்ணாமலையில் உள்ளார் .கடந்த 2005-ம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.இதன்பின்னர் ஷில்பா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி திருப்பதியில் அவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.இந்தநிலையில் யுவன்சங்கர்ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார்.இஸ்லாம் மதத்துக்கு மாறியஅவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சொந்த ஊராக கொண்டு மலேசியாவில் வசித்துவரும் ஆடை வடிவமைப்பாளர் ஜபருன்னிசாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் 29-ந்தேதி சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது. தந்தை பெரியார் திரைப்படத்துக்கு இசையமைக்க மறுத்த  நன்றி மறந்த இளையராஜாவுக்கு காலம் கொடுத்த செருப்படி இது . சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சியால் வாழ்வில் உயர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த இளையராஜா இனி முகத்தை எங்கே?

கனிமொழி கொந்தளிப்பால் தத்தளிக்கிறார் கருணாநிதி? தினமலர் !

கட்சியில் தன்னை முழுமையாக ஓரங்கட்ட முயற்சிகள் நடப்பதாகவும், அதற்காகவே, தன்னை மாணவர் அணி செயலர் பொறுப்பில் நியமிக்க, தலைமையில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வருத்தத்துடன் கூறியதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் தி.மு.க., உட்கட்சித் தேர்தல், பரபரப்போடும், விறுவிறுப்போடும் கடந்த ஓராண்டாக நடந்து முடிந்து, மாவட்ட செயலர்கள் தேர்வும், முடிவுறும் நிலையை எட்டி இருக்கிறது. அடுத்த கட்டமாக, மாநில நிர்வாகிகள் தேர்வு மட்டுமே நடக்க வேண்டி உள்ளது. வரும் 9ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டிருப்பதால், முன்னதாக, மாநில நிர்வாகிகள் தேர்வை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
ஆட்சிக்கு வரவேண்டும் என்பதெல்லாம் கவலை இல்லை...கட்சியை கைப்பற்றி அதன் சொத்தை முழுவதுமாக கொள்ளை அடித்து தன குடும்பத்துக்கு மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் ஸ்டாலின் திட்டம்... இல்லாவிட்டால் டி வி ஆரம்பம் மற்றும் அனைத்து மேல் மட்ட வேலைகளையும் பார்த்த இவர் தன் பெயர் வெளியே வராமல் தாயையும் - தங்கையையும் மாட்டி விட்டு தான் தப்பித்து கொண்டுள்ளார்...பங்குதாரராக தங்கையை மட்டும் போட சம்மதிக்கும் போது  இவர் ஏதோ தங்கை மீதான பாசத்தில் சம்மதிக்கிறார் என்று நினைத்திருப்பர்..அதன் பின் இவ்வளவு பெரிய சதி...இப்போது அந்த வழக்கை காட்டியே கட்சியின் உயர் பதவியை தங்கைக்கு மறுக்கிறார்,  இந்த ஆள்  துரோக வேலையில் ........விட மேலானவர் என்று நிருபித்து விட்டார்....

வியாழன், 1 ஜனவரி, 2015

J K எனும் நண்பனின் வாழ்க்கை DVD யிலும் தியேட்டரிலும் 15ம் தேதி வெளியாகிறது


புது படங்களை தியேட்டரில் வெளியிடும் நாளிலேயே வீட்டுக்கு வீடு டிவிடியாக விற்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் சேரன். இதுபற்றி அவர் கூறியது:திருட்டு வி.சி.டியை ஒழிக்க கேட்டு தோற்றதுதான் மிச்சம். கேட்க நாதியில்லாத நிலை ஆகிவிட்டது. அதன்விளைவுதான் பட ரிலீஸ் அன்றே வீட்டுக்கு வீடு ஒரிஜினல் டிவிடி விற்க முடிவு செய்தேன். நான் இயக்கியுள்ள ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை‘ வரும் ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் எனது முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. சர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஒரு டிவிடி விலை ரூ.50. சி2எச் என்ற எனது அமைப்பு மூலம் தரமான புதுபடங்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இதுபோல் வழங்கப்படுகிறது.

2014 அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நீதித்துறையை ஏப்பம் விட்ட ஆண்டு! குன்ஹா மட்டுமே நீதித்துறையின் ஆக்சிஜன்!

ஜெயலலிதாவுக்காக இந்திய பத்திரிகைகளும் டிவிக்களும் (ஜாதி ஜாதி ) எவ்வளவு தூரம் அடிமை சேவகம் செய்கின்றன என்பதை காட்ட இந்த சவுக்கு கட்டுரை ஒரு நல்ல Flashback ஆகும் 
நேற்றைக்கு முன்தினம், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை முடிந்து, செப்டம்பர் 20 அன்று தீர்ப்பு என்று அறிவித்தார்,  சிறப்பு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.  தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கண்காணித்துக் கொண்டிருக்கும் முக்கிய வழக்கு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. ஜெயலலிதா சிக்கிம் மாநிலத்தின் முதல்வர் அல்ல.  தமிழகத்தின் முதல்வர்.    தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இந்தச் செய்தி. ஆனால், தமிழகத்தில் உள்ள அத்தனை அச்சு ஊடகங்களும் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்தன அல்லது முழுமையாக புறக்கணித்தன. இந்து நாளேடு, 7வது பக்கத்தில் இரண்டு காலத்தில் சிறிய செய்தியாக வெளியிட்டிருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியாவும் இந்த செய்தியை ஏழாவது பக்கத்தில் வெளியிட்டிருந்தது.  டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு இது செய்தியே அல்ல.

ஜெ. மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக குமாரசாமி நியமனம்- கர்நாடகா ஹைகோர்ட்!

பெங்களூரு: தமக்கு சிறைத் தண்டனை விதித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் சிறப்பு அமர்வின் நீதிபதியாக குமாரசாமியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. 1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றது. இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதியன்று பெங்களூர் தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி, சசிகலா, இளவரசி,சுதாகரனுக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.  அமித்ஷா என்கவுண்டர் வழக்கில் இருந்து விடுதலையானது போல ஜெயாவும் தனது குற்றங்களில் இருந்து விடுதலையாவாரா என்பது ஒன்றும் மில்லியன் டொலர் குவேஸ்சன் அல்ல. நிச்சயம் விடுதலையாவார். நீதித்துறையின் லட்சணம் அப்படி ?