வேலை நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக 02.01.15 வெள்ளிக்கிழமை காலை முதல் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தென் கொரிய நிறுவனமான NVH India Auto Parts Pvt Ltd -ல் தொழிலாளர்கள் ULF சங்கம் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் தொழிலாளர்களை தென் கொரிய அதிகாரிகள் தாக்கும் காட்சிகளையும், மிரட்டும் காட்சிகளையும் தொழிலாளர்கள் சிலர் தங்கள் செல்போனில் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்தனர்.
வீடியோவில், தொழிலாளி பூபாலன் என்பவரின் காலை பிடித்து தென்கொரிய அதிகாரி ஒருவரால் இழுத்து வந்து மிரட்டப்படுகிறார். தாக்கப்பட்ட தொழிலாளி பூபாலன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் வீடியோவை வெளியிட்டட சக தொழிலாளர்கள், தமிழக அரசே! கொத்தடிமை கூடாரமா ஸ்ரீபெரும்புதூர்? மோடி அரசே! இது தான் உங்கள் "MAKE IN INDIA" திட்டமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொழிலாளார் நலத்துறை இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.nakkheeran.in
1 கருத்து:
வெளிநாட்டுக்கு போனாலும் நாம அடிமை
வெளி நாட்டுக்காரன் இங்கே வந்தாலும் நாம தான் அடிமை
# என்ன கொடும இது
கருத்துரையிடுக