அளவில் இயற்கையாளர்கள் அல்லது ஆடைகளற்று வாழ்பவர்களுக்கான சங்கத்தை
உருவாக்கியவர்களில் ஒருவரான கிறிஸ்டியான் லெகாக்கின் இறுதி நிகழ்வுகள்
பாரிஸில் நடைபெற்றுள்ளன.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய இரவில் தமது 103ஆவது வயதில் அவர் காலமானார்.
இயற்கையாக வாழ்வது அதாவது ஆடைகளற்று நிர்வாணமாக வாழ்வது எனும் கலாச்சாரத்தை 1933ஆம் ஆண்டு முதல் பின்பற்றத் தொடங்கிய அவர், உலக இயற்கையாளர்கள் சம்மேளனம் எனும் அமைப்பை இதற்காகத் தொடங்கிட உதவினார்.
விடுமுறை காலத்தில் ஆடைகள் இல்லாமல் இருக்கும் அனுபவத்தை கூடுதலாக முன்னெடுப்பதே தமது லட்சியம் என்று கூறும் அந்த அமைப்பு, நிர்வாணம், சமூக மற்றும் சுகாதார அனுகூலங்களை அளிக்கும் என்று கூறுகிறது.
கிறிஸ்டியன் லெகாக் அம்மையார் மற்றும் அவரது கணவர் ஆல்பர்ட் இணைந்து உலக அளவில் முதல் முறையாக இயற்கையான முறையில் நிர்வாணமாக விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு மையத்தை, தென்மேற்கு பிரான்ஸில் தொடங்கினர்.
பின்னர் இயற்கையாளர்களுக்காகவே லவியோ சொலி அதாவது சூரியனில் வாழ்க்கை எனும் பொருள்படும் ஒரு பத்திரிகையைத் தொடங்கினர்.
ஐரோப்பாவில் மட்டும் ஐம்பது லட்சம் பேரும், உலக அளவில் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பேரும் நிர்வாணமான இயற்கைவாழ்வாளர்கள் இருப்பதாக இயற்கையான வாழ்வாளர்கள் சங்கத்தினர் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக